/* */

அதிக விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை. ஆட்சித்தலைவர் விஷ்ணு எச்சரிக்கை.

HIGHLIGHTS

அதிக விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை
X

மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு.

அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு உரம் விற்ககூடாது மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு எச்சரிக்கை.

அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தெரிவித்துள்ளார். அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் விலைப்பட்டியல் விவசாயிகளின் பார்வையில் தெரியும்படி வைக்க வேண்டும். உர விற்பனை நிலையங்களில் விற்பனை முனையக்கருவி மூலம் உரங்கள் முறையாக விநியோகம் செய்யப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உர விலை மற்றும் உர இருப்பு விபரத்தினை விவசாயிகளின் பார்வையில் படுமாறு அனைத்து உரக்கடைகளிலும் வைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரவிலை இருப்பு விபர பலகையில், புகார் தெரிவிக்க வேண்டிய அலைபேசி எண்களை குறிப்பிட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலைக்கு மேல் விற்றால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் உர உரிமமும் ரத்து செய்யப்படும். 45 கிலோ அளவுள்ள யூரியா மூடையின் விலை ரூ.266.50/-ஆகும். 50 கிலோ அளவுள்ள டிஏபி மூடையின் விலை ரூ.1200/- ஆகும். IPL, MCF மற்றும் Mosaic நிறுவனங்களின் பொட்டாஷ் மூடையின் விலை ரூ.1040/- CIL நிறுவன பொட்டாஷ் மூடையின் விலை ரூ.1015/- ஆகும். 50 கிலோ அளவுள்ள 20:20:0:13 காம்பளக்ஸ் உரங்களை IPL, நிறுவனம் ரூ.1050/- க்கும், IFFCO நிறுவனம் ரூ.1220/-க்கும், Spic நிறுவனம் ரூ.1275/-க்கும், Fact நிறுவனம் ரூ.1390/-க்கும், CIL நிறுவனம் ரூ.1225/-க்கும், Kribhco நிறுவனம் ரூ.1175/-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

50 கிலோ அளவுள்ள 10:26:26 காம்பளக்ஸ் உரங்களின் விலையானது IFFCO நிறுவனம் ரூ.1440/-க்கும், Kribhco நிறுவனம் ரூ.1375/-க்கும், CIL நிறுவனம் ரூ.1300/-க்கும், விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 50 கிலோ அளவுள்ள 17:17:17 காம்பளக்ஸ் உரங்களின் விலையானது Spic நிறுவனம் ரூ.1300/-க்கும் MFL நிறுவனம் ரூ.1250/-க்கும், விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 50 கிலோ அளவுள்ள 16:20:0:13 காம்பளக்ஸ் உரங்களின் விலையானது IPL நிறுவனம் ரூ.1250/-க்கும், CIL நிறுவனம் ரூ.1125/-க்கும், விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அம்மோனியம் சல்பேட் உரம் ரூ.850/-க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில உரங்களின் விலை, நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபட்டு இருப்பதால் விவசாய பெருமக்கள் தனியார் உரவிற்பனை நிலையங்களில் சென்று உரங்கள் வாங்கும் பொழுது மூடையில் அச்சடிக்கப்பட்ட கூடுதல் பட்ச விலையினை பார்த்து அதற்கு மிகாமல் வாங்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விவசாயிகள் உரவிற்பனை நிலையத்திற்கு செல்லும் போது அவர்களது ஆதார் அட்டையினை கொண்டு சென்று உரம் வாங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் உரம் வாங்கும் போது கட்டாயமாக உரம் வாங்கியதற்கான இரசீது கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். விவசாயிகள் சாகுபடி மேற்கொள்ளும் போது மண்வள அட்டை பரிந்துரையின்படி உரமிடவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Updated On: 12 Nov 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  2. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  4. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  7. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  8. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்