/* */

நெல்லையப்பர் கோவிலில் தீப திருவிழாவையாெட்டி சொக்கப்பனை ஏற்றும் வைபவம்

நெல்லையப்பர் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

HIGHLIGHTS

நெல்லையப்பர் கோவிலில் தீப திருவிழாவையாெட்டி சொக்கப்பனை ஏற்றும் வைபவம்
X

நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றும் வைபவம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றும் வைபவம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இரண்டு நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நேற்றைய தினம் சுவாமி சன்னதி முன்பு பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திருக்கார்த்திகை திருநாளான இன்று காலையில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரமும், அதனை தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.

பின்னர் விநாயகர், சுப்பிரமணியர், சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் பஞ்சமூர்த்திகளாக கோவில் முன்பு அமைந்துள்ள சொக்கப்பனை மூக்கிற்கு ஊர்வலமாக எழுந்தருள செய்தனர். பின்னர் சுவாமி சன்னதி மகாமண்டபத்தில் நேற்றைய தினம் ஏற்றப்பட்ட பரணி தீபத்தை தலையில் சுமந்து வந்து சொக்கப்பனை முக்கில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ருத்ர தீபம் எனப்படும் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 19 Nov 2021 3:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்