/* */

நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய இந்திர விமானம்: அதிமுக செயலாளர் வழங்கல்

நெல்லையப்பர் கோவிலுக்கு ரூ.9 லட்சம் மதிப்பில் புதிய இந்திர விமானத்தை அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை-கணேசராஜா வழங்கினார்.

HIGHLIGHTS

நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய இந்திர விமானம்: அதிமுக செயலாளர் வழங்கல்
X

நெல்லையப்பர் கோவிலுக்கு ரூ.9 லட்சம் மதிப்பில் புதிய இந்திர விமானத்தை அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை-கணேசராஜா வழங்கினார்.

அருள்மிகு சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் திருக்கோவிலுக்கு ரூ. 9 லட்சம் மதிப்பில் புதிய இந்திர விமானத்தை அதிமுக மாவட்டச் செயலாளர் தச்சை.கணேசராஜா தனது சொந்த செலவில் வழங்கினார்.

தமிழகத்தில் பழமையான மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான அருள்தரும் அன்னை காந்திமதி அம்பாள் உடனுறை,அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோயிலும் ஒன்றாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் முக்கிய நிகழ்ச்சியான ஆனிப் பெருந்தேர்த்திருவிழா மற்றும் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவில் ஐந்தாம் திருநாள் திருவிழாவாகும். இந்நிகழ்ச்சி அன்று அன்னைகாந்திமதி அம்பாள் திருவீதிவுலாவுக்காக எழுந்தருளச் செய்யும் வாகனமாகிய இந்திர விமானம் பழுதடைந்து பயன்படுத்த முடியாமல் இருந்தன.

இந்த இந்திர விமானத்தை புதிதாக அமைப்பதற்கு திருநெல்வேலி அதிமுக மாவட்ட கழக செயலாளர் தச்சை என். கணேசராஜா முயற்சி எடுத்து தனது சொந்த செலவில் சுமார் 9 லட்சம் ரூபாய் மதிப்பில், தேக்கு மரத்தினால் 1500 கிலோ எடையில் இந்த இந்திர விமானத்தை புதிதாக திருக்கோவில் வளாகத்தில் வைத்து உருவாக்குவதற்கு ஏற்பாடு செய்தார். புதிய தேர் (இந்திர விமானம்) பணிய முழுவதுமாக முடிந்து நிலையில் 6ம் தேதி மாலை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்டச் செயலாளர் கணேசராஜா தலைமையில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பக்தர்கள் என திரளானோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்திர விமானத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தொடர்ந்து இந்திர விமானம் கோவிலுக்கு வெளியே கொண்டு வரப்பட்டு அம்மை-அப்பர் ஆசியுடனும், அடியார் பெருமக்கள் பேராதரவுடனும் கோவிலைச் சுற்றி நான்கு ரதவீதியில் வீதிவுலாவாக எடுத்து வந்து திருக்கோயில் நிர்வாகத்திடம் சமர்ப்பித்தார். தொடர்ந்து மாவட்ட செயலாளர் தச்சை- கணேசராஜா பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் கோவில் பிரசாதங்கள் வழங்கினார்.

இதில் கழக அமைப்புச் செயலாளர் சுதா K.பரமசிவம், மாவட்டக் கழக அவைத் தலைவர் பரணி A. சங்கரலிங்கம், பாளையங்கோட்டை பகுதி மகளிர் அணி செயலாளர் மாரியம்மாள், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பு செயலாளர் சிவந்தி மகாராஜன், மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள், பகுதி வட்டக் கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 7 Dec 2021 2:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்