/* */

நெல்லை மாநகராட்சிக்கு வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் துண்டிப்பு

நெல்லை மாநகராட்சிக்கு நெடுங்காலமாக வரி செலுத்தாத 4 வீடுகளில் குடிநீர் இணைப்பை துண்டிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

நெல்லை மாநகராட்சிக்கு வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் துண்டிப்பு
X

நெல்லை மாநகராட்சி

திருநெல்வேலி மாநகராட்சி வார்டு 33, 41, 51, ஆகிய பகுதிகளில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் நெடுங்காலமாக செலுத்தாத வரி விதிப்புதாரர்களின் 4 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு செய்து மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடந்த 2021-22-ஆம் ஆண்டிற்கான வரிவசூல் வரும் 31.03.2022-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் தொழில்வரி, அச்சம் மற்றும் அருவருக்கதக்க இனங்களுக்கான உரிமக்கட்டணம், பாதாள சாக்கடை பராமரிப்பு கட்டணம் மற்றும் மாநகராட்சி கடை வாடகை ஆகிய வரி மற்றும் வரியில்லா இனங்களை உடனடியாக மாநகராட்சிக்கு செலுத்த கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் சொத்துவரி, குடிநீர் கட்டணம் அதிக அளவில் நிலுவை வைத்து நெடுங்காலமாக வரி செலுத்தாமல் உள்ள திருநெல்வேலி மண்டலம் (பழைய வார்டு 41ல்) சேரன்மகாதேவி ரோடு குடியிருப்பு ஒன்றிலும் (பழைய வார்டு 51ல்) புகழேந்தி தெரு குடியிருப்பு இரண்டிலும் , மேலப்பாளையம் மண்டலம் (பழைய வார்டு 33ல்) கணேசபுரம் தெரு குடியிருப்பு ஒன்றிலும் ஆக மொத்தம் 4 வீட்டுக் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீட்டுக் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளை தவிர்த்திடும் பொருட்டு நிலுவை வரியினங்களை காலதாமதம் இன்றி மாநகராட்சி கணிணி வரி வசூல் மையத்தில் செலுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

Updated On: 22 March 2022 2:58 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  2. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  3. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  4. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  5. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  8. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  10. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து