/* */

2 ஆண்டுகளுக்கு பின்னர் நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம் கோலாகலம்

2 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று நெல்லையில் நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.

HIGHLIGHTS

2 ஆண்டுகளுக்கு பின்னர் நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம் கோலாகலம்
X

நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் இன்று மிக சிறப்பாக நடைபெற்றது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுணில் உள்ள நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் ஆனி மாதம் நடைபெறும் ஆனித்தேரோட்டம் தான் முக்கிய திருவிழாவாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக ஆனித் தேரோட்டம் திருவிழா நடைபெறவில்லை.

இந்த ஆண்டு திருவிழா கடந்த மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. தேரோட்டத்தில் விநாயகர் சுவாமி, நெல்லையப்பர் காந்திமதி அம்பாள், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து தேர் நான்கு ரத வீதிகளில் வலம் வரும் தேரோட்டத்தை காணவும், தேரை வடம் பிடித்து இழுக்கவும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரத விதிக்கு வருகை புரிந்துள்ளனர்.

இதையொட்டி இன்று அதிகாலை சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து சுவாமிகள் தேரில் எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை சபாநாயகர் அப்பாவு, நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். இதனை தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தை ஒட்டி இன்று திங்கட்கிழமை நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் மட்டுமல்லாது, அண்டை மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் நேரில் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டு மிக உற்சாகத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகிறார்கள். நான்கு ரத வீதிகளில் பக்தர்களின் கூட்டமாகவே காட்சியளித்தது.

மேலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருப்பதற்காக வாகனங்கள் நிறுத்துவதற்காக இடங்களும் தயார் செய்யப்பட்டுள்ளது. தேரோட்டத்தையொட்டி நெல்லை மாநகர காவல் துறை ஆணையர் அவினாஷ் குமார் உத்தரவின் பேரில் துணை ஆணையர்கள் சீனிவாசன், சரவணகுமார், அனிதா ஆகியயோர் நேரடி மேற்பார்வையில் 13 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1500 போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Updated On: 11 July 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்