/* */

தீபாவளியையாெட்டி தென் மாவட்டங்களுக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை எழும்பூர் - நாகர்கோவில், கோவில்பட்டி வழியாக தாம்பரம் - திருநெல்வேலி மற்றும் தென்காசி வழியாக தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன.

HIGHLIGHTS

தீபாவளியையாெட்டி தென் மாவட்டங்களுக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்
X

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை எழும்பூர் - நாகர்கோவில், கோவில்பட்டி வழியாக தாம்பரம் - திருநெல்வேலி மற்றும் தென்காசி வழியாக தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன.

1. வண்டி எண் 06037 சென்னை எழும்பூர் - நாகர்கோவில் விரைவு சிறப்பு ரயில் சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 3ஆம் தேதி அன்று இரவு 10.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.00 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06038 நாகர்கோவில் - சென்னை எழும்பூர் விரைவு சிறப்பு ரயில் நாகர்கோவிலிலிருந்து நவம்பர் 5ஆம் தேதி மாலை 03.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். நாகர்கோவில் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் மாம்பலம் ரயில் நிலையத்திலும், சென்னை எழும்பூர் நாகர்கோவில் சிறப்பு ரயில் அரியலூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.

2. வண்டி எண் 06040 திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் நவம்பர் 7ஆம் தேதி திருநெல்வேலியிலிருந்து இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை வழியாக சென்று மறுநாள் காலை 07.55 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில் அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

3. வண்டி எண் 06049 தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு கட்டண சிறப்பு ரயில் தாம்பரத்திலிருந்து நவம்பர் 8 ஆம் தேதி மாலை 04.00 மணிக்கு புறப்பட்டு மதுரை, கோவில்பட்டி வழியாக சென்று மறுநாள் அதிகாலை 03.00 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். இந்த ரயில் செங்கல்பட்டு விழுப்புரம் அரியலூர் திருச்சி திண்டுக்கல் மதுரை விருதுநகர் சாத்தூர் கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நவம்பர் 2 செவ்வாய்க்கிழமை காலை 08.00 மணிக்கு துவங்குகிறது.

Updated On: 2 Nov 2021 4:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’