/* */

துாத்துக்குடி-போர்க்கால நடவடிக்கை- கொரோனா தொற்று குறைய ஆரம்பித்துள்ளது-அமைச்சர்

தூத்துக்குடி-கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி முகாம்-தமிழக நலத்துறை அமைச்சர் ஆய்வு. செய்தார்.

HIGHLIGHTS

துாத்துக்குடி-போர்க்கால நடவடிக்கை- கொரோனா தொற்று குறைய ஆரம்பித்துள்ளது-அமைச்சர்
X

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி முகாம்களை தமிழக மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் வருவாய் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பிற்பகலில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள நோய் தடுப்பு நடவடிக்கைகள், நோய் கட்டுப்பாட்டு மையங்கள், அங்குள்ள மக்களுக்கு அளிக்கப்படும் உதவிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறையின் மூலமாக ஒருங்கிணைப்பு செய்யப்படும் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 9 இடங்களில் கிராமப்புறங்களில் இன்று கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்துள்ளோம். மேலும் தடுப்பூசி போடும் பணிகளையும் தொடங்கி வைத்துள்ளோம். தூத்துக்குடி மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக 23,000 டோஸ்கள் கையிருப்பு உள்ளது. 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த 26,500 டோஸ்கள் கையிருப்பு உள்ளது. காயல்பட்டினத்தில் பொதுமக்களின் வசதிக்காக அங்குள்ள மருத்துவமனை விரைவில் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் சீரமைக்கப்படும். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வெகு காலமாக பூட்டிக்கிடக்கும் பொது வழியை திறந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் படுக்கைகள், சாதாரண படுக்கை, தீவிர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் 65 சதவீத படுக்கை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. 35 சதவீத படுக்கை காலியாகவே உள்ளது. தமிழக அரசின் போர்கால நடவடிக்கையின்பேரில் கரோனா தொற்று குறைய ஆரம்பித்துள்ளது. இனி படிப்படியாக குறையும். கரோனாவுக்கு சித்தா, அலோபதி, ஹோமியோபதி, யுனானி மருத்துவ முறைகளிலும் சிகிச்சை அளிப்பதற்காக 37 இடங்களில் மருத்துவ சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அறிவிப்புபடி காப்பீடு திட்டத்தின் கீழ் கரோனாவுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக மருத்துவமனைகளுக்கு அறிவுரை வழங்கபட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 27 தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. காப்பீடு திட்டத்தின் கீழ் பயன்பெற பொதுமக்கள் என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பாக விளம்பரங்கள் வைக்கவும் கூட்டத்தில் தீர்மாணிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்துகள் தொடர்பான தேவைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார். டி.ஆர்.பாலு எம்.பி. மூலம் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அழுத்தம் தரப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகிறோம்‌ என்றார்.

கரும்பூஞ்சை பாதிப்பு தொடர்பான கேள்விக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பதிலளிக்கையில், கரும்பூஞ்சைக்கு 181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்வரின் உத்தரவுபடி, பரவல் நோயாக கரும்பூஞ்சை தொற்று அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் 30 படுக்கை கொண்ட வார்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நோய் தொற்றுக்கு தேவையான மருந்துகளை அளித்திட மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். விரைவில் அவை கிடைத்திடும் என்றார்.

Updated On: 25 May 2021 12:42 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை எனும் பயணத்தில்.. திருமண நாள் வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...
  3. நாமக்கல்
    கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பங்கேற்ற நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா
  4. பொன்னேரி
    எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி காளிகாம்பாள் ஆலயத்தில் சிறப்பு...
  5. ஒட்டன்சத்திரம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மூன்று மடங்கு உயர்ந்த எலுமிச்சை...
  6. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
  7. சோழவந்தான்
    மதுரை அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் வழங்கப்பட்ட...
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை உலக அன்னையர் தின விழாவில் நடந்த உணவு வழங்கல் நிகழ்ச்சி
  9. காஞ்சிபுரம்
    ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்கும்’- செங்கோட்டையன்
  10. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!