மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மூன்று மடங்கு உயர்ந்த எலுமிச்சை விலை..!

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மூன்று மடங்கு உயர்ந்த  எலுமிச்சை விலை..!

திடீரென எலுமிச்சம் பழம் விலை உயர்வு.

திண்டுக்கல்லில் வரத்து குறைவால் எலுமிச்சை விலை 3 மடங்கு உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்:

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில்,ரூ.2,000 – 2,500 வரை விற்பனையான 50 கிலோ எலுமிச்சை மூட்டை, தற்போது ரூ.8,000க்கு விற்பனையாகி வருகிறது. வெயிலின் காரணமாக வரத்து குறைந்துள்ளதால், மேலும், 2 மாதங்களுக்கு விலை குறையாது என, வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு தென் மாவட்டங்களில் சூரியன் சுட்டெரித்து.அதனால், பொதுமக்கள் வெப்பத்தை சமாளிக்க பொதுமக்கள் பலர் இளநீர்,எலுமிச்சை ஜூஸ், மோர், கரும்பு சாறு ஜூஸ் பருகுவது வழக்கமாக கொண்டிருந்தனர். கோடை வெயில் தாக்கம் காரணமாக தென் மாவட்டங்களில் எலுமிச்சை விளைச்சலும் குறைந்துவிட்டது.

அதனால் மதுரை, திண்டுக்கல் மாவட்ட சந்தைக்கு வரத்து பெரிதும் குறைந்தது. அதனால் ஒரு மூட்டை விலை சந்தையில் பல மடங்கு உயர்ந்து காணப்பட்டது. அதனால் 50 கிலோ எலுமிச்சை மூட்டை, தற்போது ரூ.8,000க்கு விற்பனையாகி வருகிறது. இந்த விலை உயர்வு முந்தைய விலையை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மதுரை மாவட்டத்தில் பகல் பொழுது வெப்பம் அதிகமாக காணப்படுகிறது.மாலை நேரங்களில் சில இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மதுரை புறநகர் மாவட்ட பகுதிகளிலும், வடக்கு மழை பெய்து வருகிறது சோழவந்தானில், பலத்த மழையால், வாழை மரங்கள் சேதமடைந்தன.

மற்றும் பரவை, சமயநல்லூர் ,திருமங்கலம் மேலூர், ஒத்தக்கடை, கருப்பாயூரணி ,பேரையூர், கல்லுப்பட்டி ,செக்கானூரணி ,வாழந்தூர், செல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

Tags

Next Story