/* */

தூத்துக்குடி மாநகராட்சியில் நாளை 9 மையங்களில் தடுப்பூசி முகாம் : 1200 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தத் திட்டம்.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நாளை ஜூன் 26ம் தேதி 9 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இம்முகாம் மூலம் 1200 தடுப்பூசிகள் செலுத்த திட்டம் மிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாநகராட்சியில் நாளை 9 மையங்களில் தடுப்பூசி முகாம் : 1200 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தத் திட்டம்.
X

தூத்துக்குடி மாநகராட்சியில் நாளை நடைபெறவுள்ள கொரோனா தடுப்பூசி மையங்களின் அட்டவணை.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றின் தாக்கமானது குறைந்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மற்றும் மாநகராட்சி நிர்வாகம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 5 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நாளை ஜூன் 26ஆம் தேதி 9 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இதில் காமராஜ் கல்லூரி திருச்செந்தூர் மெயின் ரோடு, புனித தாமஸ் பள்ளி இன்னாச்சியார்புரம், புனித மேரீஸ் பள்ளி பாளைரோடு, மற்றும் பாத்திம்மா நகர், கணேஷ் நகர், திரேஸ்புரம், கணேஷ்நகர், முள்ளக்காடு, பிஅன்டி காலனி உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட 9 இடங்களில் நடைபெறும் முகாமில் 1200 தடுப்பூசிகள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ அறிவித்துள்ளார்.

Updated On: 25 Jun 2021 6:09 PM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு