/* */

தீபாவளி தற்காலிக பட்டாசு கடைகளுக்கான உரிமம்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

தீபாவளி தற்காலிக பட்டாசு கடைகளுக்கான உரிமம்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
X

தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில், தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பம் உள்ளவர்கள் 30.9.2021-ம் தேதிக்குள் அரசு பொது இ-சேவை மையம் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 22-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

எனவே விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பத்துடன் கட்டிட வரைபடங்கள் அசல், கட்டிட உரிமைக்கான ஆவணம், வாடகை ஒப்பந்த பத்திரம் அசல், ரூ.500 அரசு கணக்கில் செலுத்திய செலுத்துச்சீட்டு அசல், அடையாள அட்டை (பான்கார்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு), ஊராட்சி, நகராட்சியில் வரி செலுத்திய ஆவணங்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்கலாம்.

இந்திய வெடிபொருள் சட்டம், 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008 மற்றும் வெடிபொருள் திருத்தம் விதிகள் 2019-ன் கீழ் உள்ள விதிமுறைகளின்படி, விண்ணப்பங்கள் பரீசீலனை செய்யப்பட்டு, தகுதியான மனுதாரர்களுக்கு தற்காலிக பட்டாசு கடை உரிமம் வழங்கப்படும். ஏற்கனவே விண்ணப்பிக்க தவறியவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 18 Oct 2021 4:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க