/* */

புரட்டாசி கடைசி சனிக்கிழமை திருக்கண்ணமங்கை கோயிலில் பக்தர்கள் வழிபாடு

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி திருவாரூர் மவட்டம் திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

HIGHLIGHTS

புரட்டாசி கடைசி சனிக்கிழமை திருக்கண்ணமங்கை கோயிலில் பக்தர்கள் வழிபாடு
X

திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை பெருமாள் கோயிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமை வழிபாடு நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கையில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலான ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் ஆலயம், 108 திவ்ய தேசங்களில் 27- வது ஸ்தலம் ஆகும்.

ஆழ்வார்களால் பாசுரங்கள் பாடப்பட்ட ஸ்தலம், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் பெற்ற இந்த ஆலயத்தில் மூலவர் ஸ்ரீ பக்தவச்சலப் பெருமாள் ஸ்ரீ அபிசேக வல்லி உடனுறை ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாளை புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருவார்கள்.

இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்கள் கோயில்களில் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.. அதனால் கடந்த சனிக்கிழமைகளில் பக்தர்கள் திருக்கண்ணமங்கை பெருமாள் கோவிலுக்கு வராத நிலை ஏற்பட்டது.

தற்பொழுது அனைத்து நாட்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என அரசு அறிவித்த நிலையில் புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான நேற்று திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.

Updated On: 17 Oct 2021 3:37 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  6. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  8. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  9. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!