/* */

திருவாரூர் அருகே பனைமரங்கள் வெட்டுவதை எதிர்த்து சாலை மறியல் போராட்டம்

திருவாரூர் அருகே நெடுஞ்சாலையோரம் இருந்த பனைமரங்கள் வெட்டப்பட்டதை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது.

HIGHLIGHTS

திருவாரூர் அருகே பனைமரங்கள் வெட்டுவதை எதிர்த்து  சாலை மறியல் போராட்டம்
X

திருவாரூர் அருகே பனை மரங்கள் வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது.

திருவாரூர் விளமல் அருகே திருவாரூர் - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் மருத்துவமனை கட்டுமான பணிகளை தொடங்குவதற்காக, பணிகள் நடைபெற உள்ள இடத்திற்கு கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல சாலைக்கும் அந்த இடத்தையும் இணைக்கும் வகையில் சிறிய பாலம் ஒன்றை கட்டுவதற்காக பொக்லைன் இயந்திரம் கொண்டு வாய்க்காலை தோண்டும் போது இடையூறாக இருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலைத்துறையின் அனுமதியின்றி வேறுடன் பிடுங்கி எடுத்து செல்லும் காட்சி வாட்ஸ் ஆப்பில் பரவியது.

இதனையடுத்து தேசிய சட்ட உரிமை கழகத்தினர் மாநில தலைவர் மணி தலைமையில் பணிகளை தடுத்து நிறுத்தியதோடு பனைமரங்ளை நீதிமன்ற உத்தரவின்படி உரிய அனுமதியின்றி வெட்டக் கூடாது என்றும் இதற்கு தமிழக அரசும் தடை விதித்துள்ள நிலையில் வெட்டியவர்கள் மீது வழக்குபதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பயந்துபோன ஜே.சி.பி. ஓட்டுனர் மறைவான இடத்தில் வாகனத்தை நிறுத்தினார். இந்த மறியல் போராட்டத்தால் திருவாரூர் - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த காவல்துறையினர் ஒப்பந்தக்காரர் முருகன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிப்பதாக கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தின் போது 108 அவசர ஊர்தி செல்ல மட்டுமே வழிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 24 Jan 2022 1:40 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...