/* */

திருவாரூரில் அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம்

"உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" என்ற திட்டத்தினை விரைந்து மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவாரூரில்  அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம்
X

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள நடந்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுகூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை வகித்தார்.

தமிழக முதலமைச்சர் சிந்தையில் உருவான திட்டமான "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" என்ற திட்டத்தினை அறிவித்து அதற்கென தனித்துறையே உருவாக்கி உள்ளார்கள்.

அந்தவகையில், தமிழக முதல்வர் இத்திட்டத்தின்கீழ் பெறப்பட்ட பொதுவான அடிப்படை பிரச்சினைகள் மற்றும் தனிப்பட்ட குறைகள் குறித்த மனுக்கள் அனைத்தும் தொடர்புடைய துறைகளுக்கு பிரித்து அனுப்பபட்டுள்ளது.

அத்தகைய, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது தொடர்புடைய அனைத்து துறை அலுவலர்களும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்துத்துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் .வே.சாந்தா. கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் .வே.சாந்தா , திட்ட இயக்குநர்.தெய்வநாயகி, முதுநிலை மண்டல மேலாளர் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) .மணிவண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சமூக பாதுகாப்பு திட்டம்) .கண்மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) .புண்ணியகோட்டி உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 17 May 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!