/* */

அரசு மருத்துவமனைக்கு வரும் கொரோனா நோயாளிகள் தனியாருக்கு பரிந்துரை

தமிழக முதல்வரின் சொந்த மாவட்டமான திருவாரூரில் அரசு மருத்துவமனைக்கு வரும் கொரோனா நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அரசு மருத்துவமனைக்கு வரும் கொரோனா நோயாளிகள் தனியாருக்கு பரிந்துரை
X

திருவாரூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்பதை கடந்த 2009 ஆம் அரசு மருத்துவக் கல்லூரியை அமைத்து திமுக அரசு நிறைவேற்றியது. இந்த மருத்துவக்கல்லூரியில் செயல்படும் பல்வேறு சிகிச்சைப் பிரிவுகளால் திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் பயன் அடைந்து வருகிறனர்.

தற்போது கொரோனா இரண்டாவது அலை வீசுவதால் ஒவ்வொரு மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் தற்சமயம் 1200 க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.

அதுமட்டுமின்றி திருவாரூர் மாவட்டத்தில் 48 சதவீதம் படுக்கைகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலியாக உள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று பாதிக்கப்படுவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வரும் நிலையில்.

அரசு மருத்துவப் பணியாளர்கள் ஒரு குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளின் பெயர்களை குறிப்பிட்டு அங்கு செல்கிறீர்களா..? பரிந்துரைப்பதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட நபர் கூறியது, அரசு சார்பில் வெளியிடப்படும் அறிக்கையில் 40 சதவீதத்திற்கு மேலாக படுக்கைகள் காலியாக உள்ளதாக வெளிப்படையாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் முதல்வரின் சொந்த மாவட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு வரும் கொரோனா நோயாளிகளை தனியார் மருத்துவமனை செல்ல பரிந்துரைப்பது வேதனையான ஒன்றாகும்.

அரசு மருத்துவக் கல்லூரிக்கு காலையில் வரும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மாலை 3 மணி வரை காக்க வைத்து அதன் பின்னரே அவர்களுக்கு படுக்கை ஒதுக்கப்படுகிறது. இதனிடையே கொரோனா நோயாளிகளை 300 மீட்டடர் தூரம் சென்று புற நோயாளிகள் சீட்டு வாங்கி வர கூறுகின்றனர்.

அங்கு கொரோனா பாதிக்காதவர்களும் சீட்டு பெற வருகின்றனர். அரசே கொரோனாவை பரப்பும் வேலை பார்க்கிறது. சுகாதாரத்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஒரு நோயாளிக்கு நாளொன்றுக்கு ரூ.250 க்கும் மேல் செலவு செய்து உணவு வழங்குகிறது. ஆனால்

திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைப் பெறும் பாதிக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு அரசு வழங்கும் உணவுகள், பழங்கள், பால் வகைகள் கொடுக்கப் படுவதில்லை. நோயாளிகள் தங்கள் உறவினர்களை உணவு வாங்கி வரச்சொல்லி சாப்பிடுகின்றனர்.

மருத்துவக் கல்லூரியில் வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில்லை என்பது பொது குற்றச்சாட்டாக உள்ளது. இதுகுறித்து மருத்துவக்கல்லூரி டீனிடம் ஜோசப் ராஜ் கேட்டபோது, எங்களுக்கு யாரும் அறிவுரை கூறவேண்டாம் என்ற பாணியில் பேசிவிட்டு சென்றார்.

இதுதொடர்பாக மாநில சுகாதார துறைச் செயலர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். ஒரு கட்டத்தில் அவராலும் டீனை ஜோசப் ராஜ் சமாளிக்க முடியவில்லை. எனவே முயற்சியை அவரும் கைவிட்டார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தாவிடம் கேட்டபோது. உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். எனவே முதல்வரின் சொந்த மாவட்டத்தில் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி தொடங்கிய கல்லூரியில் நிலவும் அவலம், டீனின் மெத்தனம் குறித்து புதிய தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Updated On: 5 May 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க