/* */

திருவாரூரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் திடீர் போராட்டம்

ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணத் தொகையாக வழங்க வலியுறுத்தி குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் திடீர் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

திருவாரூரில் நடந்த  குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் திடீர் போராட்டம்
X

திருவாரூரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் திடீர் என போராட்டம் நடத்தினர்.

மாதத்திற்கு ஒரு முறை என்ற வீதத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் இன்றைய தினம் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது .இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் .

அண்மையில் பெய்த மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் சம்பா தாளடி பயிர்கள் முழுமையாக சேதம் அடைந்தது .இதற்கான இடுபொருள் நிவாரணத் தொகையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில் மீண்டும் நிலப் பரப்பில் சாகுபடி செய்ய முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளதால் தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை எந்தவிதத்திலும் போதாது எனவும் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Updated On: 30 Nov 2021 12:32 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க