/* */

திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர்  ஆய்வு
X

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்.

திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

இன்றைய காலகட்டத்தில் நிலவிவரும் கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று கண்டறியப்படாத நிலையில் மூச்சு திணறலோடு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் இருப்பார்கள். அவர்களை கொரோனா பரிசோதனைக்காக காத்திருக்க வைக்க கூடாது. அவர்களுக்கு காலதாமதமின்றி உடனடியாக முதலுதவி சிகிச்சை வழங்கவேண்டும். அந்த வகையில், செயற்கை சுவாச கருவிகள், இதயதுடிப்பு மற்றும் உடல் ஆக்ஸிஜன் அளவை கணக்கிடும் கருவிகளுடன் 12 படுக்கைகளுடன் கூடிய அதிநவீன சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகை புரிகின்றவர்கள் காலதாமதமின்றி உரிய பிரிவுகளுக்கு செல்வதற்கு வழிவகை செய்கின்ற வகையில் பிரிவுகளை சுட்டிக்காட்டி அவற்றிற்கு செல்வதற்கான குறியீட்டு பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் .ப.காயத்ரி கிருஷ்ணன்.தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ஜோசப்ராஜ், உள்ளிட்ட மருத்துவர்கள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 19 Jun 2021 10:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!