/* */

ஆதார் அட்டையில் திருத்தம்; பரிதவிக்கும் தேனி மாவட்ட மக்கள்

ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதில் உள்ள நடைமுறை சிக்கல்களால் தேனி மாவட்ட பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

ஆதார் அட்டையில் திருத்தம்;  பரிதவிக்கும் தேனி மாவட்ட மக்கள்
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டையில் பலருக்கு பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதனால் ஆதார் அட்டையில் திருத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த திருத்த பணிகளுக்கு செல்லும் பொதுமக்களிடம் பல்வேறு ஆவணங்களை கேட்டு ஆதார் பதிவு , திருத்தம் செய்யும் பணியாளர்கள் பாடாய் படுத்துகின்றனர். குறிப்பாக பலரிடம் டாக்டர் சர்டிபிகேட் வேண்டும் என கேட்கின்றனர். டாக்டர் சர்டிபிகேட் வாங்கி கொடுத்தால், இந்த டாக்டர் கொடுத்தது செல்லாது, குறிப்பிட்ட சில தகுதி கொண்ட டாக்டரிடம் தான் வாங்க வேண்டும் என்கின்றனர்.

அவரிடம் வாங்கி கொடுத்தால், இவர் இதற்கு முன்னர் பலருக்கு கொடுத்துள்ளார். இதனால் இனி இவர் கொடுப்பதை பதிய மாட்டோம், இதே போல் தகுதிகள் கொண்ட வேறு டாக்டரிடம் வாங்கி வாருங்கள் என்கினற்னர்.

இதேபோல் வி.ஏ.ஓ., உள்ளிட்ட பல அலுவலர்களிடம் சான்று கேட்கின்றனர். வாங்கி கொடுத்தாலும் ஏற்பதில்லை. இதனால் ஆதார் அட்டையில் சிறு திருத்தம் செய்ய, பொதுமக்கள் பலமுறை அலைய வேண்டி உள்ளது.

இது போன்ற குளறுபடிகளை சரி செய்ய தேவையான நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Updated On: 9 Aug 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்