/* */

தஞ்சாவூர் மாவட்டத்தில் வரைவு வாக்களார் பட்டியலில் மொத்தம் 20,31, 384 வாக்காளர்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர்பட்டியல்படி மொத்தம் 20 லட்சத்து 31 ஆயிரத்தி 384 வாக்காளர்கள் உள்ளனர்

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாவட்டத்தில் வரைவு வாக்களார் பட்டியலில் மொத்தம் 20,31, 384 வாக்காளர்கள்
X

தஞ்சாவூர் மாவட்டஆட்சித்தலைவர் அலுவலக கூட்டஅரங்கில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை இன்று (09.11.2022) வெளியிட்டார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்களார் பட்டியலின்படி ஆண் வாக்காளர்கள் 9, 88, 837 நபர்கள், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 10,42,392 நபர்கள் இதர பாலினத்தவர்கள் 155 நபர்கள் உட்பட மொத்த வாக்காளர்கள் 20, 31,384 ஆகும்.

தஞ்சாவூர் மாவட்டஆட்சித்தலைவர் அலுவலக கூட்டஅரங்கில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை இன்று (09.11.2022) வெளியிட்டார்.

பின்னர் மாவட்டஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று வெளியிடப்பட்டது. அக்டோபர் 2022 வரை பதிவு செய்யப்பட்டவாக்காளர்கள் பெயர் சேர்க்கப்பட்டு, உரிய திருத்தங்கள் மற்றும் நீக்கம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதி வாரியாக (1) திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 128061 நபர்கள் பெண் வாக்காளர்கள் 130213 நபர்கள் மூன்றாம் பாலினத்தவர் 12 ஆக கூடுதல் 258286 வாக்காளர்கள், (2) கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 131589 நபர்கள் பெண் வாக்காளர்கள் 138263 நபர்கள் மூன்றாம் பாலினத்தவர் 16 ஆக கூடுதல் 269868 வாக்காளர்கள்.

(3) பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 126254 நபர்கள் பெண் வாக்காளர்கள் 132160 நபர்கள் மூன்றாம் பாலினத்தவர் 18 ஆக கூடுதல் 258432 வாக்காளர்கள், (4) திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 128556 நபர்கள் பெண் வாக்காளர்கள் 135217 நபர்கள் மூன்றாம் பாலினத்தவர் 16 ஆக கூடுதல் 263789 வாக்காளர்கள்.

(5) தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 133519 நபர்கள் பெண் வாக்காளர்கள் 145595 நபர்கள் மூன்றாம் பாலினத்தவர் 59 ஆக கூடுதல் 279173 வாக்காளர்கள், (6) ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 117700 நபர்கள் பெண் வாக்காளர்கள் 124348 நபர்கள் மூன்றாம் பாலினத்தவர் 3 ஆக கூடுதல் 242051 வாக்காளர்கள், (7) பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 116026 நபர்கள் பெண் வாக்காளர்கள் 125691 நபர்கள் மூன்றாம் பாலினத்தவர் 23 ஆக கூடுதல் 241740 வாக்காளர்கள், (8) பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 107132 நபர்கள் பெண் வாக்காளர்கள் 110905 நபர்கள் மூன்றாம் பாலினத்தவர் 8 ஆக கூடுதல் 218045 வாக்காளர்கள் ஆவர்.

கடந்த 05.01.2022 முதல் 08.11.2022 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களில் தகுதியான நபர்களின் படிவங்கள் ஏற்கப்பட்டு 10380 நபர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இறந்த, இடம் பெயர்ந்த வாக்காளர்கள் 49394 நபர்களின் பெயர்களை விசாரணை அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளது.

09.11.2022 அன்று வெளியிடப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலின் நகல், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களிலும் பொது மக்களின் பார்வைக்காக வருகிற 26.12.2022 வரை வைக்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் பிழையின்றி இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் 01.01.2023 அன்று 18 வயது நிரம்பியவர்கள் அதாவது 01.01.2005 அன்று அல்லது அதற்கு முன்பாக பிறந்தவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் உள்ளவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட, படிவம் எண் 6-ஐ அந்தந்த வாக்குச் சாவடிகளில் பெற்று பூர்த்தி செய்து அதனுடன் வயது மற்றும் இருப்பிடத்திற்கான ஆவண நகல்களை இணைத்து தங்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப் படத்தினை படிவத்தில் ஒட்டி அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கலாம்.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு படிவம் 6பி - இல் ஆதார் எண், வாக்காளர் அடையயாள அட்டை எண் மற்றும் மொபைல் எண் விவரங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். இறப்பு, நிரந்தரமான குடிபெயர்வு, இரட்டை பதிவு போன்ற காரணங்களின் அடிப்படையில் பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7 -ஐ பூர்த்தி செய்து வழங்கலாம். அனைத்து வகையான பிழை திருத்தங்கள் மேற்கொள்ள, தொகுதி மாற்றம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, பெயர், உறவு முறை, புகைப்படம் மாற்றம் செய்ய படிவம் 8 -ஐ பூர்த்தி செய்து வழங்கலாம்.

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளராக டி. ஆப்ரஹாம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, அரசு தனிச்செயலாளர் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர், தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தப் பணிகளை 09.11.2022 முதல் 05.01.2023 வரை மூன்று கட்டமாக ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கிணங்க பொதுமக்களின் வசதிக்காக நவம்பர் மாதம் 12.11.2022 (சனிக்கிழமை), 13.11.2022 (ஞாயிற்றுகிழமை) மற்றும் 26.11.2022 (சனிக்கிழமை), 27.11.2022 (ஞாயிற்றுகிழமை) ஆகிய நான்கு நாட்களுக்கு தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி, மேலே குறிப்பிட்டுள்ளவாறு உரிய படிவத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பம் செய்திடலாம். வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் காலை 09.30 மணிமாலை 5.30 மணிவரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மற்ற நாட்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கலாம் என்றார் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ்பொன் ராஜ் ஆலிவர் .

இக்கூட்டத்தில் கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலர் பூர்ணிமா, வட்டாட்சியர் (தேர்தல்) ராமலிங்கம், திராவிட முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளர் துரைசந்திரசேகர், ஒன்றிய குழு தலைவர் கே.வி.கலைச்செல்வன், ஒன்றிய செயலாளர் முரசொலி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிர்வாகி ஆர்.காந்தி, கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கலியமூர்த்தி, செயலாளர்கள் சாமிநாதன், சண்முகபிரபு, ரமேஷ், இந்திய தேசிய காங்கிரஸ் பொருளாளர் பழனியப்பன், பாரதிய ஜனதா கட்சி பாலசெல்வம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Nov 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  9. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!