/* */

குறு வட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

அடையாள அட்டை பெறாதவர்களுக்காக பிர்கா வாரியாக (குறு வட்ட அளவில்) 50 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

HIGHLIGHTS

குறு வட்ட அளவில்  மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்
X

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் குறு வட்ட அளவில் நடைபெற உள்ளது.

தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவர்களுக்கு, பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. மாவட்டத்தின் தொலை தூரங்களில் இருந்து வந்து அடையாள அட்டை பெறாதவர்களுக்காக பிர்கா வாரியாக (குறு வட்ட அளவில்) 50 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக திருவிடைமருதூர், திருவையாறு மற்றும் பேராவூரணி ஆகிய வட்டங்களில் 11 குறு வட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் கீழ்கண்டவாறு காலை 10 மணி முதல் பிற்பகல் 1.00 வரை நடைபெற உள்ளது.

திருவிடைமருதூர் ஒன்றியம்: திருவிடைமருதூர் 19.05.2022 வியாழன் கிழமை திருவாவடுதுரை ஆதினம் அம்பல வாண தேசிகர் நடுநிலைப்பள்ளி. ஆடுதுறை 24.05.2022 செவ்வாய் கிழமை ஸ்ரீ குமர குருபரர் துவக்கப்பள்ளி. முருகன்குடி 31.05.2022 செவ்வாய் கிழமை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, திருநாகேஸ்வரம்.நாச்சியார்கோவில் 07.06.2022 செவ்வாய் கிழமை ராமகிருஷ்னா உதவி பெறும் நடுநிலை பள்ளி.

திருவையாறு ஒன்றியம் : திருவையாறு 26.05.2022 வியாழன் கிழமை சரஸ்வதி அம்மாள் துவக்கப்பள்ளி.நடுக்காவேரி 02.06.2022 வியாழன் கிழமை ஊராட்சி ஒன்றிய நடுநிலப்பள்ளி .கண்டியூர் 9.06.2022 வியாழன் கிழமை ஆதி திராவிடர் துவக்கப்பள்ளி.

பேராவூரணி ஒன்றியம்: திருச்சிற்றம்பலம் 20.05.2022 வெள்ளிக்கிழமை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி. குறிச்சி 27.05.2022 வெள்ளி கிழமை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி. பேராவூரணி 4.06.2022 சனி கிழமை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, கிழக்கு ஆவணம். 10.06.2022 வெள்ளி கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆவணம்.

இம்முகாமில் எலும்புமுறிவு மருத்துவர், காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர், மன நல மருத்துவர் மற்றும் கண் மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்க உள்ளார்கள். மேற்படி மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர், திருவையாறு மற்றும் பேராவூரணி ஆகிய வட்டங்களில் 11 குறு வட்டங்களுக் குட்பட்ட அனைத்து கிராமங்களைச்சேர்ந்த இதுநாள் வரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம். இதுநாள்வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் மேற்படி முகாமில் மேற்கூறிய ஆவனங்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம். முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவேளி கட்டாயம் பின்பற்றவேண்டும்

திருவிடைமருதூர், திருவையாறு மற்றும் பேராவூரணி ஆகிய வட்டங்களில் 11 இடங்களில் நடைபெறும் முகாம்களில், மாற்றுத்திறனாளிகள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகாமையில் நடைபெறும் சிறப்பு முகாமில் உரிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகள் நேரில் வந்து கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்று பயன்பெறுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல் தெரிவித்தார்.

Updated On: 18 May 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க