/* */

அனைத்துதுறை பணிகள் மற்றும் பேரிடர் முன்னேற்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள 485 பணிகளுக்கு இந்த மாத இறுதிக்குள் அனுமதி வழங்கப்படும்

HIGHLIGHTS

அனைத்துதுறை பணிகள் மற்றும் பேரிடர் முன்னேற்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு
X

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் முதன்மை செயலாளர் மற்றும் டான்சி நிர்வாக இயக்குனர் டாக்டர். எஸ்.விஜயகுமார், மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அனைத்து துறை பணிகள் முன்னேற்றம் மற்றும் பேரிடர் முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்  நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் முதன்மை செயலாளர் மற்றும் டான்சி நிர்வாக இயக்குனர் டாக்டர். எஸ்.விஜயகுமார், மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அனைத்து துறை பணிகள் முன்னேற்றம் மற்றும் பேரிடர் முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் (19.10.2022) நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் முதன்மை செயலாளர், டான்சி நிர்வாக இயக்குனர் டாக்டர்.எஸ்.விஜயகுமார் கூறியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக் கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்துதுறை பணிகள் முன்னேற்றம் மற்றும் பேரிடர் முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் தற்போது நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் நமக்குநாமே திட்டம், காலை சிற்றுண்டி திட்டம், சமத்துவ மயானம், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், குடிமராமத்து பணிகள், என்னும் எழுத்தும் இயக்கம், மக்களை தேடிமருத்துவம், பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்.

பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், தூய்மை பாரத இயக்கம், திடக் கழிவு மேலாண்மை திட்டம் நீர்நிலை புறம்போக்கு, பொதுப்பணித்துறை போன்ற இடங்களில் குடியிருப்பவர்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குதல் குறித்தும், இ- சேவை மையங்கள் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவதில் தொடர்பாகவும் இக்கூட்டத்தில ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக விளிம்பு நிலைமக்களுக்குமின் இணைப்பு வழங்கிட துரிதநடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்காணிப்பு பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கலைஞரின் நகர்ப்புறமேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் மின்சார சுடுகாடு பயன்பாடு குறித்த செயல் திட்டம் தயார் செய்து 15 நாட்களுக்குள் அறிக்கை அனுப்பி வைத்திட, பேரூராட்சி உதவி இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள 485 பணிகளும் இந்த மாத இறுதிக்குள் நிர்வாக அனுமதி வழங்கப்படும்,

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாநகராட்சி 20 பணிகளும், கும்பகோணம் மாநகராட்சி 5 பணிகளும், பட்டுக்கோட்டை நகராட்சி 1 பணிகளும் அதிராம்பட்டினம் நகராட்சி 2 பணிகளும் பேரூராட்சிகள் 17 பணிகளும் நவம்பர் மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாக தரமாகவும் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா.,மாநகராட்சி ஆணையர்கள் சரவணகுமார் (தஞ்சாவூர்), செந்தில் முருகன் (கும்பகோணம்), வருவாய் கோட்டாட்சியர்கள் பிரபாகர் (பட்டுக்கோட்டை), லதா(கும்பகோணம்), ரஞ்சித் (தஞ்சாவூர்), நகராட்சி ஆணையர்கள் சௌந்தரராஜன் (பட்டுக்கோட்டை), எல்.குமார்(அதிராம்பட்டினம்), முதன்மைகல்வி அலுவலர் மு.சிவகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கி.ரெங்கராஜன், வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Oct 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  2. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  4. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  5. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  6. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  7. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்த இருவர் கைது
  8. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  9. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  10. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்