/* */

தஞ்சை மாவட்டத்தில் நாளை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை காலை 10. மணி முதல் பிற்பகல் 3. மணி வரை நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.

HIGHLIGHTS

தஞ்சை மாவட்டத்தில் நாளை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
X

பைல் படம்

பொதுமக்கள் இணைய வழிவாயிலாக தற்போது பெற்று வரும் சேவைகளை விரைவாகவும் பல்வேறு துறைகள் மூலம்பெற்று வரும் வெவ்வேறு சேவைகளை ஒரே இடத்திலும் பெறுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் சீரிய வழிகாட்டுதலின் படி ”மக்களுடன் முதல்வர்” என்ற பெயரில் புதிதாக திட்டம் தொடக்கப்பட்டு சிறப்பு முகாம்கள் அனைத்து மாநகராட்சிகள் / நகராட்சிகள்/ பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதியை ஒட்டியுள்ள ஊரகப் பகுதிகளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் காலை 10. மணி முதல் பிற்பகல் 3. மணி வரை நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, 22.12.2023 அன்று காலை 10. மணிமுதல் பிற்பகல் 3. மணிவரை மாநகராட்சியில் தஞ்சாவூர் பூக்கார வாண்டையார் தெரு, இருதயபேராலய மக்கள் மன்றம் மற்றும் கும்பகோணம் பக்தபுரி தெரு, பவளம் திருமண மஹாலிலும், நகராட்சியில் பட்டுக்கோட்டை பண்ணவயல் ரோடு, பி.ஆர்.டி. மஹால் மற்றும் அதிராம்பட்டினம் செல்லியம்மன் கோவில் திருமண மண்டபத்திலும், பேரூராட்சியில் 1.ஆடுதுறை கலையரங்கம், கோசிமணிவீரசோழன் திருமண மண்டபம், 2.அய்யம்பேட்டை டி.கே.ஜி.மஹால் 3.மேலதிருப்பந்துருத்தி சின்ன பள்ளிவாசல் மண்டபம், 4.திருக்காட்டுப்பள்ளி பழமார் நேரிசாலை, மாலா திருமண மண்டபம் 5.வல்லம் பேரூராட்சி அலுவலகம் அருகில் சமுதாய கூடத்திலும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் எரிசக்தித்துறை / தமிழ்நாடு மின்சார வாரியம், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப் புற வளர்ச்சித் துறை , உள் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் (ம) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை (மாவட்டதொழிற் மையம்), தொழிலாளர் நல வாரியம், கூட்டுறவுத் துறை ஆகிய துறைகளில் கணினி மூலம் பதிவு செய்து தேவையான ஆவணங்கள் பெறுவதற்கு அதற்குரிய கட்டணம் செலுத்தி தொடர்புடைய துறைகளிடமிருந்து பெற்றுக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், பொது மக்களுக்கு தேவைப்படும் சேவைகளை பெறுவதற்கு அதற்குரிய ஆவணங்களை தவறாமல் முகாமிற்கு எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்கள்.

Updated On: 21 Dec 2023 2:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  7. இந்தியா
    நன்கொடை வழங்கியதில் இந்திய அளவில் இவர் தான் நம்பர் ஒன் பெண்மணியாம்
  8. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...
  9. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை
  10. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா