/* */

டெல்டா மாவட்ட தூர்வாரும் பணிகள் விரைவில் முடிக்கப்படும்: சந்தீப் சக்சேனா

டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் பணிகள் மே 31ம் தேதிக்குள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

டெல்டா மாவட்ட தூர்வாரும் பணிகள் விரைவில் முடிக்கப்படும்: சந்தீப் சக்சேனா
X

கால்வாய் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த சந்தீப் சக்சேனா

டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 4649 கிலோமீட்டர் தூரத்திற்கு 80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் பணிகள் மே 31 ம்தேதிக்குள் முடிக்கப்படும், தூர் வாரும் பணிகளில் குறைகள் இருந்தால் "உழவன் செயலி" மூலம் விவசாயிகள் அளிக்கும் புகார்களுக்கு 48 மணி நேரத்தில் உரிய பதில் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தஞ்சையில் இப்பணிகளை ஆய்வு மேற்கொண்ட நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா கூறினார்.

தஞ்சை மாவட்டம் ஆச்சாம்பட்டியில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஜயகுமார், நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

80 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 10 மாவட்டங்களில், 4649 கி.மீ.,துாரத்திற்கு துார்வாரும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. வெளிப்படை தன்மையாக விவசாயிகளை கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வரும் மே மாதம் 31ம் தேதிக்குள்ளாக அனைத்து பணிகளும் முடிந்து விடும்.

எந்தந்த பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளது என்பதை கண்டறிந்து, அப்பகுதியும் துார்வார நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கை அடிப்படையில் தான் திட்டமிட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. கடைமடை வரை தண்ணீர் செல்லும். 29 ஆயிரம் கி.மீ., துாரத்திற்கு வாய்க்கால்கள் உள்ள நிலையில் தற்போது பகுதி பகுதியாக துார்வாரும் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

தண்ணீர் பாசனத்திற்கு முறையாக செல்லாத இடங்களிலும், தண்ணீர் தேங்கும் இடங்களிலும் முக்கியத்துவம் அளித்து துார்வாரும் பணிகள் செய்யப்படுகிறது. மேலும், துார்வாரும் பணிகளை ட்ரோன் மூலம் கண்காணிக்க கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. துார்வாரும் பணிகளை விவசாயிகள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. உழவன் செயலி மூலம், துார்வாரும் பணிகளில் குறைப்பாடுகள் இருந்தால் விவசாயிகள் புகார் அளித்தால் 48 மணி நேரத்தில் உரிய பதில் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Updated On: 26 April 2022 3:37 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  3. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  4. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  5. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  6. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  9. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  10. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...