/* */

ஜவுளிக்கடையில் தீ விபத்து - வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் விசிட்!

சுரண்டையில், தீ விபத்துக்குள்ளான ஜவுளிக்கடையை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பார்வையிட்டனர்.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டம் சுரண்டை சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில், நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில், கடையின் நான்கு தளங்களும் எரிந்து சாம்பலாயின. இதில் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பில் பொருட்கள் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இந்த தீ விபத்து இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோர், கடையின் உரிமையாளர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு விபரங்களை கேட்டறிந்தனர்.

அதனைத் தொடர்ந்து, தென்காசி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவையின் மாவட்ட தலைவர் ஆர்கே காளிதாஸ், தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ் பழனிநாடார், சுரண்டை வியாபாரிகள் சங்கத் தலைவர் கேடிகே காமராஜ், துணைத் தலைவர் சிவசக்தி முத்தையா, செய்தி தொடர்பாளர் ராஜகுமார், வத்தல் வியாபாரிகள் சங்க நிர்வாகி ரத்தினசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் , விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, கடையின் உரிமையாளர் செந்தில்குமாரிடம் விபரங்களை கேட்டறிந்துனர். அத்துடன், வியாபாரிகள் சங்கம் சார்பில் தேவையான உதவிகள் செய்வதாகவும் உறுதி அளித்தனர்.

Updated On: 27 April 2021 5:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  3. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  4. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  5. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  6. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  9. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  10. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி