/* */

பள்ளி அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: கிராம மக்கள் போராட்டம்

இடைகால் துரைச்சாமிபுரம் பகுதியில் உள்ள பள்ளி அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெிரவித்து கிராம மக்கள் போராட்டம்.

HIGHLIGHTS

பள்ளி அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: கிராம மக்கள் போராட்டம்
X

இடைகால் துரைச்சாமிபுரம் பகுதியில் உள்ள பள்ளி அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெிரவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தென்காசி மாவட்டம் இடைகால் துரைச்சாமிபுரம் பகுதியில் அமைந்துள்ளது இந்து மறவர் தொடக்கப்பள்ளி. இப்பள்ளியில் சுமார் 120 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளி அருகே தனியார் நிலத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் பணி நடைபெறவில்லை. இந்நிலையில் நேற்று இரவு திடீரென செல்போன் கோபுரம் அமைக்கும் பணி மளமளவென நடைபெற்றது. இதனை அறிந்த பொதுமக்கள் இன்று காலை பள்ளி முன்பு திரண்டனர். இப்பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பட்சத்தில் பள்ளியில் படிக்கும் 120 மாணவர்களுக்கும் மாற்றுச் சான்றிதழ் பெற்று வேறு பள்ளியில் சேர்ப்போம் என்று தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர் தொடர்ந்து தற்காலிகமாக அப்பகுதியில் கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. வருகின்ற ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இப்பகுதி மக்களின் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 28 Oct 2021 10:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட தனியார் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?