/* */

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு: தென்காசியில் அமைச்சர் ஆய்வு

தென்காசியில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் மற்றும் வளர்ச்சிப்பணி குறித்த ஆய்வுக் கூட்டம், வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில், நடைபெற்றது.

HIGHLIGHTS

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு: தென்காசியில் அமைச்சர் ஆய்வு
X

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்,  வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில், தென்காசியில் நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில், அணைகளின் நீர்மட்டம், நீர் நிலைகளின் தற்போதைய நிலை, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் என்பது போன்ற பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. முடிவில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழையை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. தமிழகத்தின் தென் பகுதிகளில் தொழில் வளர்ச்சி என்பது இல்லாமல் உள்ளது. சென்னை, திருச்சி, கோவை உட்பட வட மாவட்டங்களை சுற்றியே தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

எதிர்காலத்தில் தென்பகுதியிலும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மையமாக தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். செண்பகவள்ளி அணை சீரமைப்பு குறித்து 1984- ஆம் ஆண்டே அப்போதைய முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். அணை சீரமைப்பு பணிகள் குறித்தும் கேரள அரசிடம் சுமுகமாக பேசி நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ், தென்காசி பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனி நாடார், சதன் திருமலைக்குமார் உள்பட உள்ளாட்சித் துறை அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Oct 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  4. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  6. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  7. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  8. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  9. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!