/* */

வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை

கடுமையான வெயில் காரணமாக, தென்காசி மாவட்டத்தில் எலுமிச்சை பழம் கிலோவிற்கு ரூபாய் 140 ஆக காணப்பட்டது.

HIGHLIGHTS

வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
X

பாவூர்சத்திரம் சந்தையில் குவித்து வைக்கப்பட்டுள்ள எலுமிச்சை மூடைகளை காணலாம்.

கடுமையான வெயிலின் தாக்கம் எதிரொலியாக தென்காசி மாவட்டத்தில் எலுமிச்சை பழங்களின் விலை கிலோவிற்கு ரூபாய் 140 ஆக அதிகரித்து காணப்பட்டது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கமானது 100 டிகிரி செல்சியஸை தாண்டி பதிவாகி வரும் நிலையில் பொதுமக்கள் அதிகளவில் பழங்கள் மற்றும் அதனைச் சார்ந்த குளிர்பானங்களை பருகி வருகின்றனர். சர்பத் மற்றும் ஜூஸ் வகைகளை தயார் செய்வதற்கு அதிகம் எலுமிச்சம் பழங்களை பயன்படுத்தி வரும் நிலையில் தென்காசி மாவட்டத்தில் அதிகம் விளையும் எலுமிச்சம் பழங்களின் விலையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் தினசரி சந்தைக்கு கடையம், ஆவுடையானூர், அணைந்தபெருமாள் நாடானூர், செல்ல பிள்ளையார்குளம், வள்ளியம்மாள்புரம், சேர்வைகாரன்பட்டி, புலவனூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகம் எலுமிச்சை சாகுபடி செய்து வரும் நிலையில் அதிகளவில் எலுமிச்சம் பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

சந்தையில் கடந்த வாரம் வரையில் ஒரு கிலோ எலுமிச்சம்பழம் ரூபாய் 100 முதல் 120 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 140 ஆக அதிகரித்தது. கடுமையான வெயிலின் காரணமாக எலுமிச்சம் பழக்கங்களின் தேவை அதிகரித்துள்ளதாகவும் அதனை வாங்குவதற்கு உள்ளூர் வியாபாரிகள் மற்றும் கேரளா வியாபாரிகள் இடையே கடுமையான போட்டி நிலவியது. பாவூர்சத்திரம் காய்கறி சந்தையில் எலுமிச்சம் பழங்களை ஏலத்தில் எடுப்பதற்கு பலரும் போட்டி போட்டனர் .உள்ளூர் வியாபாரிகளை காட்டிலும் வெளியூர் வியாபாரிகள் எலுமிச்சம் பழங்களை ஏலத்தில் எடுப்பதற்காக குவிந்திருந்தனர்.

வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடிக்குமானால் எலுமிச்சம் பழங்களின் விலையும் கணிசமாக உயர்ந்து கொண்டே செல்ல வாய்ப்புள்ளது எனவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Updated On: 26 April 2024 12:47 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க