/* */

குற்றால அருவியில் குளிக்கும் போராட்டம் தற்காலிமாக ஒத்திவைப்பு: சிஐடியு அறிவிப்பு

நவம்பர் 9 இல் நடைபெறும் குற்றாலத்தில் குளிக்கும் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

குற்றால அருவியில் குளிக்கும் போராட்டம் தற்காலிமாக ஒத்திவைப்பு: சிஐடியு அறிவிப்பு
X

தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் குற்றாலத்தில் குளிக்கும் போராட்ட குழுவினருடன் சமாதான கூட்டம் நடைபெற்றது.

குற்றாலத்தில் நவம்பர் 9 இல் சிஐடியு சார்பாக நடைபெறும் வியாபாரிகள் விடுதி உரிமையாளர்கள் தொழிலாளர்களின் வாழ்வுரிமைக்காக சிஐடியூ சார்பாக நடக்கும் தடையை மீறி குற்றால அருவியில் குளிக்கும் போராட்டம் சம்மந்தமாக தென்காசி கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் டிசம்பர் 10-க்குள் குற்றால அருவியை பொதுமக்கள் குளித்திட திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எழுத்துப்பூர்வமான உடன்பாடு சமாதான கூட்டம் முடிவின் அடிப்படையில் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் குற்றாலத்தில் குளிக்கும் போராட்ட சமாதான கூட்டத்தில் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.

இதில் தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் த.மணிமாறன், குற்றாலம் காவல்துறை ஆய்வாளர், தென்காசி வட்டாட்சியர் அவர்கள் தென்காசி வருவாய் ஆய்வாளர், குற்றாலம் கிராம நிர்வாக அலுவலர், குற்றாலம் கிராம நிர்வாக உதவியாளர், மற்றும் சிஐடியு சங்க மாவட்ட தலைவர் எஸ் அயூப் கான் சிஐடியு மாவட்ட செயலாளர் எம் வேல்முருகன் மாவட்ட பொருளாளர் கே தர்மராஜ் மாவட்ட துணைத்தலைவர் டீ வன்னியபெருமாள் மாவட்ட இணைச்செயலாளர் என் லெனின்குமார் தென்காசி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு வட்டார செயலாளர் கே மாரியப்பன் ஆகியோர் சமாதான கூட்டத்தில் பங்கேற்றனர் கூட்டத்தில் சிஐடியு சார்பாக உடனடியாக குற்றால அருவியை திறந்து பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் கொரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகளாக கடுமையான துயரத்தில் உள்ள வியாபாரிகளுக்கு கடை வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

கோட்டாட்சியர் உங்களுடைய கோரிக்கையை உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் குற்றால அருவியை திறந்திட டிசம்பர் 10-க்குள் முடிவு எடுக்கப்படும் என்று எழுத்துப்பூர்வமான உடன்பாட்டை தெரிவித்தார். காவல்துறை அதிகாரிகளும் அதனை முன்மொழிந்தனர். சிஐடியு சார்பாக உடனடியாக குற்றால அருவியை திறந்து வணிகர்கள், சிறு வியாபாரிகள், ஆட்டோ தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் மற்றும் உள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று மீண்டும் தெரிவித்தோம். அதற்கான நடவடிக்கையை நாங்கள் உடனடியாக எடுப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததால் நவம்பர் 9 இல் நடைபெறும் குற்றாலத்தில் குளிக்கும் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை சிஐடியு மாவட்ட குழுவின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

Updated On: 8 Nov 2021 5:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க