/* */

பொங்கல் தொகுப்பின் தரம், எடை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சிவகங்கையில், நுகர்பொருள் வாணிப கழக குடோன்களில் உள்ள பொங்கல் தொகுப்புகளின் தரம், எடை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

பொங்கல் தொகுப்பின்  தரம்,  எடை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

நுகர்பொருள் வாணிப கழகத்தில், பொங்கல் தொகுப்புகளின் தரம், எடை குறித்து ஆய்வு செய்த, சிவகங்கை  மாவட்ட ஆட்சியர்.

சிவகங்கையில், ரேஷன் கார்டுகளுக்கு இன்று முதல், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. பொருட்களின் எடை சரியாக உள்ளதா என, நுகர்பொருள் வாணிப கழக குடோன்களில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார். மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில், 20 வகையான பொங்கல் பொருட்கள் வழங்கப்படுகிறது.

சிவகங்கை மாவட்ட அளவில் 4,11,110 ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் அகதிகள் முகாமில் வசிக்கும் 999 ரேஷன் கார்டுதாரர்கள் என மொத்தமாக 4 லட்சத்து 12 ஆயிரத்து 109 காடுகளுக்கும் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இந்த பொருட்கள் நுகர்பொருள் வாணிப கழகம் குடோன்கள் மூலம் லாரிகளில் அந்த ரேஷன் கடைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. மளிகை பொருட்கள் அடங்கிய பை தயாரிக்கும் பணியில் பல்வேறு இடங்களில் நடக்கிறது.

இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள நுகர்பொருள் வாணிபக் குடோன்களில் சென்ற மாவட்ட ஆட்சியர் ரேஷன் கடைகளுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த மளிகை பொருட்களின் எடை சரியாக உள்ளதா என பார்வையிட்டார். மேலும் அரசு அறிவித்த படி பச்சரிசி வெல்லம் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் உரிய இடையில் வழங்குவதை எந்தவித குறைபாடும் இருக்கக்கூடாது என நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்தார்கள். பாக்கெட் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தையும் தராசு மெஷினில் வைத்து சரியான எடையில் பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளதா என பரிசோதனை மேற்கொண்டார்.

Updated On: 4 Jan 2022 4:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க