/* */

சிவகங்கை அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் ஆருத்ரா தரிசன விழா

சிவகங்கை காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசன திருநாள் முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் வெகு விமரிசையாக நடைபெற்றன

HIGHLIGHTS

சிவகங்கை அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் ஆருத்ரா தரிசன விழா
X

சிவகங்கை காசி விஸ்வநாதர் கோவில் ஆருத்ரா தரிசனம்

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மிகப் பழமையான அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்மன் சமேத ஶ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசன திருநாள் முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் வெகு விமரிசையாக நடைபெற்றன

முன்னதாக உற்சவர்கள் ஸ்ரீநடராஜப் பெருமான், ஸ்ரீ மாணிக்கவாசகர், சிவகாமி அம்மன் ஆகியோர் சர்வ அலங்காரத்தில் அருள் பாலித்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று கோபுர தீபம், கும்ப தீபம், நாக தீபம் மற்றும் வில்வத்தால் அர்ச்சனைகள் செய்யப்பட்டன

பின்னர் சுவாமி சன்னதி எதிரே கோ பூஜை நடைபெற்று பசு கன்றுக்கு உதிரிப்பூக்கள் கொண்டு அர்ச்சனைகள் செய்து அஷ்டலட்சுமிகள் அருள் பாலிக்கும் பசு மாட்டின் பின்பகுதியில் கண்ணாடியை வைத்து சுவாமிக்கும் பசுமாட்டிற்கும் ஒரே நேரத்தில் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டன

பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஆருத்ரா தரிசன நிகழ்வை கண்டு வழிபட்டனர். இதனையடுத்து தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி இரண்டு பஞ்சமுக மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ நடராஜப் பெருமானை வழிபட்டனர்.

Updated On: 20 Dec 2021 9:43 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  2. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  3. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கோவை மாநகர்
    தனியார் சொகுசு பேருந்தில் இளம்பெண் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலான சாரல் மழை ..
  7. உலகம்
    ரூ.9 லட்சம் கோடி தரவுகள் அழிந்தது எப்படி?
  8. தேனி
    தமிழகத்தின் ரோட்டோரம் கிடைக்கும் அமிர்தம்!
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை