/* */

தேர்தல் பணிக்கு முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு

தேர்தல் பணிக்கு  முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு
X

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இந்த தேர்தல் பணிகளுக்காக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களை கண்டறிந்து தேர்தல் பணியில் ஈடுபட அவர்களுக்கான அழைப்புகள் விடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு நோக்கமாக இன்று மாவட்டத்தில் வசித்து வரும் முன்னாள் ராணுவ வீரர்கள் 2091 வீரர்களை கண்டறிந்து அவர்களை அழைப்பு விடுக்கும் பணி தொடங்கிவைத்தார் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.ரா. சிவகுமார்.

ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் கவிதை ஒன்றை எழுதி கவிதை வடிவில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அந்த புத்தக கவிதையினை உள்வாங்க அவர்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாலாஜா அடுத்த முன்னாள் ராணுவத்திற்கான கேன்டீன் செயல்பட்டு வருகிறது. அந்தப்பகுதியில் நேரில் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேண்டி நிர்வாகிகளிடம் அந்த கடிதத்தை வழங்கியுள்ளார்.

அதைப் போன்று மாவட்டம் முழுவதும் ராணுவ வீரர்களுக்கு கிடைக்கும் வகையில் அந்தக் கடிதங்களை முன்னாள் ராணுவத்தினருக்கு வசிக்கும் இடத்திற்கு சென்று வழங்கப்பட இருக்கிறது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து செய்தி குறிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரருக்கு ஒருவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் அழைப்பு கடிதம் வழங்கினார். அருகில் ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பூரணி, ராணிப்பேட்டை பயிற்சி துணை கண்காணிப்பாளர் மற்றும் வாலாஜா காவல் நிலைய ஆய்வாளர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 25 March 2021 8:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க