/* */

வாலாஜாப்பேட்டையில் கடை, ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு

இராணிப்பேட்டை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இராணிப்பேட்டை மற்றும் வாலாஜாவில் உள்ள ஓட்டல்கள், கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்

HIGHLIGHTS

வாலாஜாப்பேட்டையில் கடை, ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு
X

சாலையோர உணவுக்கடை

இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டையிலுள்ள கடை ஒன்றில் கடந்த வாரம் புழு,பூச்சிகளுடன், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில் விற்பனை செய்யப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது..

அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இராணிப்பேட்டை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில் தலைமையில் அதிகாரிகள் இராணிப்பேட்டை மற்றும் வாலாஜாவில் உள்ள ஓட்டல்கள், கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தரமற்ற முறையில் உணவுப் பொருட்களை தயாரித்த3 ஓட்டல்களுக்கு தலா ரூ.2000 என ரூ. 6000 வசூலித்தனர்.

மேலும் , தள்ளு வண்டிகடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகளில் ஆய்வு செய்து, தரமற்ற உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்யக்கூடாது என எச்சரித்து சென்றனர்.

இந்நிலையில் ,அதிகாரிகளின் ஆய்வுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இந்த ஆய்வு கண்துடைப்பாகவே உள்ளது எனவும், மிகப்பெரிய கடைகள், ஓட்டல்களில் சென்று அதிகாரிகள் முறையான ஆய்வு மேற்கொள்ளவில்லை எனவும், நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்..

Updated On: 16 Sep 2021 7:05 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  2. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  3. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  5. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  6. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  7. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  8. மாதவரம்
    சரித்திர பதிவேடு குற்றவாளியை கொலை செய்தவர்கள் கைது..!
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி