/* */

புதுக்கோட்டை அருகே டிச 23 ல் வரும் காப்போம் திட்ட முகாம்: ஆட்சியர் தகவல்

இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் 32 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 35,006 நபர்கள் பயனடைந்துள்ளனர்

HIGHLIGHTS

புதுக்கோட்டை அருகே டிச 23 ல் வரும் காப்போம் திட்ட முகாம்: ஆட்சியர் தகவல்
X

பைல் படம்

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி “கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு வட்டாரத்திற்கு மூன்று மருத்துவ முகாம்கள் வீதம், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2023-2024 -ஆம் நிதியாண்டில் 39 மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் 32 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 35,006 நபர்கள் பயனடைந்துள்ளனர். தற்போது 23.12.2023 அன்று புதுக்கோட்டை வட்டாரம், வடவாளம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 33வது மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

இத்திட்டத்தின் நோக்கம், கிராமங்கள் மற்றும் நகர்புறப் பகுதிகளுக்கு நேரில் சென்று மருத்துவ வல்லுநர் குழுவினர்களால் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு பொது மக்களை பல்வேறு நோய்களிலிருந்து தொடக்க நிலையிலேயே கண்டறிந்து மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்து குணப்படுத்துவதாகும். பல்வேறு விதமான நோய்களுக்கு வருமுன் காப்போம் அணுகுமுறையை மக்களிடையே ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களுக்கு இலவச பன்முனை மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் இம்மருத்துவ முகாம்கள் மூலம் வழங்கப்படுகிறது.

இம்முகாம்களில் மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவ குழுவினரால் பொதுமக்களுக்கு குழந்தைகள் நலம், பல் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, இருதய நோய் சிகிச்சை, நீரிழிவு நோய் கண்டுபிடிப்பு, புற்றுநோய், காசநோய், மகப்பேறு மருத்துவம், சித்த மற்றும் இந்திய மருத்துவம், மனநல ஆலோசனை போன்ற துறைகளில் நிபுணத் துவம் வாய்ந்த மருத்துவர்களால் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில், “கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்” 23.12.2023 அன்று புதுக்கோட்டை வட்டாரம், வடவாளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இம்மருத்துவ முகாம் நடைபெறும். பொது மக்கள் அனைவரும் இம்மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

Updated On: 21 Dec 2023 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!