/* */

சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கி வைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில்12 முதல் 14 வரை வயதுள்ள 71,000 சிறார்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்படவுள்ளது

HIGHLIGHTS

சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கி வைப்பு
X

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அரசு மேனிலைப்பள்ளியில் சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடக்கிவைத்து பார்வையிட்ட அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன். உடன் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்டத்தில்12 முதல் 14 வரை வயதுள்ள 71,000 சிறார்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணியினை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் துவக்கி வைத்தார்.

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 12 முதல் 14 வரை வயதுள்ள சிறார்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, தலைமையில் நடைபெற்ற கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணியினை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் (16.03.2022) துவக்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் அமைச்சர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் தற்பொழுது கொரோனா பெருந்தொற்றானது கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. மேலும் கொரோனா தொற்றை தடுப்பதற்கு பேராயுதமாக விளங்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மக்கள் இயக்கமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இப்பணிகளை விரைவுப்படுத்தும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 முதல் 14 வரை வயதுள்ள சிறார்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில், சுமார் 72,000 சிறார்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் வகையில் ஊழசடிநஎயஒ தடுப்பூசிகள் 17.03.2008 முதல் 15.03.2010 வரை உட்பட்ட தேதிகளில் பிறந்த அனைத்து சிறார்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த தடுப்பூசிகள் 2 தவணைகளாக குறைந்தபட்சம் 4 வாரங்களுக்குட்பட்ட இடைவெளியில் வழங்கப்படவுள்ளது. எனவே பெற்றோர்கள் அனைவரும் தங்களது தகுதியான வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை செலுத்தி கொரோனா பெருந்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இம்முகாம்களில் துணை இயக்குநர்கள் (சுகாதாரப் பணிகள்) மரு.அர்ஜுன்குமார் (புதுக்கோட்டை), மரு.கலைவாணி (அறந்தாங்கி), புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் ஆனந்தி இளங்கோவன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 16 March 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!