/* */

தலித்துகள் வழிபட மறுக்கப்படும் கோவில்கள் குறித்து ஆய்வுசெய்ய வலியுறுத்தல்

Urging to inspect temples where Dalits are denied worship

HIGHLIGHTS

தலித்துகள் வழிபட மறுக்கப்படும் கோவில்கள் குறித்து ஆய்வுசெய்ய வலியுறுத்தல்
X

புதுக்கோட்டையில் நடைபெற்ற மாநாட்டில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினியும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் சாதிமறுப்புத் திருமணம் செய்து வைக்கப்பட்டது

தலித்துகள் வழிபட மறுக்கும் கோவில்கள் குறித்து ஆய்வுசெய்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுக்கோட்டை மாவட்ட 4-ஆவது மாநாடு புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சி.அன்புமணவாளன் தலைமை வகித்தார். மாநாட்டை தொடங்கி வைத்து சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உரையாற்றினார். மாநாட்டை வாழ்த்தி மாநில துணைத் தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகள் ஏ.ஸ்ரீதர், எஸ்.பொன்னுச்சாமி, சு.மதியழகன், துரை.நாராயணன், பி.சுசீலா, எஸ்.ஜனார்த்தனன், எம்.அசோகன் உள்ளிட்டோர் பேசினர். களப்பணிகளிள் அறிக்கையை மாவட்டச் செயலாளர் சி.ஜீவானந்தம் வாசித்தார்.

புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி மாநில தலைவர் டி.செல்லக்கண்ணு சிறப்புரையாற்றினார். மாநாட்டில் தலைவராக டி.சலோமி, செயலாளராக சி.ஜீவானந்தம், பொருளாளராக சு.கவிபாலா, துணைத் தலைவர்களாக பி.சுசீலா, வே.வீரையா, எம்.ஏ.ரகுமான், ஜெகன், துணைச்செயலாளர்களாக எம்.அசோகன், குமாரவேல், ராஜா, மகாதீர் உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர். சு.கவிபாலா நன்றி கூறினார்.

சாதி ஆணவ படுகொலையை தடுத்திட தனிச்சட்டம் இயற்ற வேண்டும். அனைத்து ஆலயங்களிலும் தலித் மக்கள் வழிபடவும், மறுக்கப்படும் கோவில்கள் குறித்து ஆய்வுசெய்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வசிப்பதற்கு லாயக்கற்று இடிந்து சேதமடைந்துள்ள காலனி வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் நீக்கமற நிறைந்துகிடக்கும் சாதீய வன்கொடுமைகள் மீது முறையான நடவடிக்கை எடுக்காத காவல்துறைக்கு கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சாதிமறுப்புத் திருமணம் மாநாட்டில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினியும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் சாதிமறுப்புத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

Updated On: 29 Jun 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்