/* */

அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சித்திட்ட கிராமங்களில் வேளாண்துறையினர் ஆய்வு

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையால் 1997 தேர்வு செய்யப்பட்டுள்ளன

HIGHLIGHTS

அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சித்திட்ட கிராமங்களில் வேளாண்துறையினர்  ஆய்வு
X

ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் 8 கிராம பஞ்சாயத்துக்களில்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் திட்ட செயலாக்கம் வீரமங்கலம் கிராமத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்வளர்ச்சித் திட்ட செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டது.

புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி தரிசு நிலங்களை சாகுபடிக்கேற்ற நிலங்களாக மாற்றி சாகுபடி பரப்பினை அதிகரித்தல். வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரித்தல்.உழவர்களின் பொருளாதார நிலையினை மேம்படுத்துதல்,சமுதாய நீர் ஆதாரங்களை உருவாக்குதல் . ஒருங்கிணைக்கப்பட்ட வேளாண் இயந்திரமயமாக்கும் துணை இயக்கத் திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் திட்டம், பிரதம மந்திரி வேளாண் நீர்ப் பாசனத் திட்டம், ஒரு துளி நீரில் அதிக விளைச்சல் - துணை நிலை நீர் மேலாண்மை திட்டம் ஆகிய ஒன்றிய அரசின் பங்களிப்பு திட்டங்களின் செயல்பாடுகள் அந்தந்த திட்டங்களில் உள்ள நிதி ஆதாரம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுத்தப்படும்.

அனைத்து இனங்களுக்கும் 100% மானியம். பல்வேறு ஒன்றிய அரசு திட்டங்களின் நெறிமுறைகளின்படி நிர்ணயித்துள்ளஉச்சவரம்பு தொகைக்கு மிகாமல் மானியம் வழங்குதல். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையால் 1997 தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் ,பாசன பரப்பு இல்லாத தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்புகளில் சமுதாய நீர் ஆதாரத்தை (ஆழ்துளை/ குழாய் கிணறு) உருவாக்குதல். ஆதி திராவிட மற்றும் பழங்குடியின தனிப்பட்ட விவசாயிகளுக்கு நீர் ஆதாரத்தை (ஆழ்துளை குழாய் கிணறு) உருவாக்குதல். பண்ணைக் குட்டைகள் அமைத்தல். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிறு பாசன குளங்கள், ஊரணிகள், குளங்கள் மற்றும் வரத்துக் கால்வாய்களை தூர்வாரி மேம்படுத்துதல்.தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களின் திட்டபகுதிகளில் உள்ள ஆதிதிராவிடர்/ பழங்குடியினர், சிறு குறு விவசாயிகள், அனைத்து விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பாண்டு 120 கிராமங்களில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம்இ கிராம பஞ்சாயத்துக்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் 8 கிராம பஞ்சாயத்துக்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் திட்ட செயலாக்கம் வீரமங்கலம் கிராமத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தரிசு நில மேம்பாட்டு குழுக்கள், அங்கு அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகள் ஆகியவற்றையும், விழிப்புணர்வு சுவர் விளம்பரம் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தென்னங்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து விவசாயிகளிடம் திட்ட பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். நடவு செய்யப்பட்ட தென்னங்கன்றுகள் மற்றும் மரக்கன்றுகள் பாராமரித்திட கேட்டுக்கொண்டார்.

ஆய்வில் இயந்திர நெல் சாகுபடி செயல்விளக்கம், வரப்பில் உளுந்து சாகுபடி மற்றும் நேரடி நெல் விதைப்புப் பகுதியில் பயிர் சாகுபடி குறித்தும், அதற்கான நுண்ணூட்ட உரக்கலவையினை இடுவதன் நன்மைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

பெருநாவலூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பீரியம் செலுத்த கடைசி நாள்.15.11.2022 எனவும், கடைசி நேர கூட்டத்தினை தவிர்த்திட, முன்னதாக தேவையான ஆவணங்களுடன் ஒரு ஏக்கருக்கு ரூ.488 மற்றும் 05 காசுகள் பீரியமாக செலுத்தி பயிர் காப்பீடு செய்திடவும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆய்வின் போது வேளாண்மை அலுவலர்(த.க) எஸ்.முகமது ரபி, வேளாண் அலுவலர் பிரவினா, வீரமங்கலம் கிராமத்தின் முனைப்பு அலுவலர்கள் செ. நிவ்யா, ஜி. பிரவீனா மற்றும் ச. அறிவுக்கரசி ஆகியோர் உடனிருந்து ஆய்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இத்தகவலை புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் மா. பெரியசாமி தெரிவித்துள்ளார்.


Updated On: 13 Nov 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!