/* */

புதுக்கோட்டை குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் நாேய் பரவும் அபாயம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை பெய்த கனமழை காரணமாக பல குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கின.

HIGHLIGHTS

புதுக்கோட்டை குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் நாேய் பரவும் அபாயம்
X

புதுக்கோட்டை சின்னப்பா நகர், உய்யகொண்டான் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை பெய்த கனமழை காரணமாக பல குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கின.

சின்னப்பா நகர், உய்யகொண்டான் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் தத்தளித்து வருவதால் சிறு குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே நல்ல மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஓய்ந்திருந்த மழையானது நேற்று மாலை திடீரென்று மீண்டும் பெய்ய தொடங்கியது இந்த மலையானது மாலை முதல் நள்ளிரவு வரை நீடித்தது சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த கனமழையால் பல பகுதிகளில் நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு உபரி நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடத்தொடங்கியது

இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர். ஓட்ட குளம் சின்னப்பா நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பி உபரிநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால் சின்னப்பா நகர் உய்யக்கொண்டான் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 50 மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் தங்களுடைய சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு மிகவும் சிரமம்ப்பட்டு வருகின்றனர்.

அதிகாரிகளிடம் தகவல் கூறியும் தண்ணீரை வெளியேற்றுவதற்கு எந்த அதிகாரியும் இதுவரை வரவில்லை என்றும் இதனால் தங்களது குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபயாமும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் இருப்பதற்கும் அரசு அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அவர்கள் முன் வைக்கின்றனர்.

Updated On: 16 Nov 2021 12:52 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க