/* */

புதுக்கோட்டை மாவட்ட நகர்புற வாழ்விடங்கள் மேம்பாட்டுக் குழுக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட நகர்புற வாழ்விடங்கள் மேம்பாட்டுக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடந்தது

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்ட நகர்புற வாழ்விடங்கள் மேம்பாட்டுக் குழுக் கூட்டம்
X

புதுக்கோட்டை மாவட்ட நகர்புற வாழ்விடங்கள் மேம்பாட்டுக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடந்தது

புதுக்கோட்டை மாவட்ட நகர்புற வாழ்விடங்கள் மேம்பாட்டுக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்.கவிதா ராமு தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் (28.04.2022) நடைபெற்றது.

தமிழ்நாட்டில் நகர்புறங்களில் உள்ள குடிசைவாசிகள் மற்றும் நகர்புற ஏழைகள் வாழ்க்கை நிலைமையை வசதி செய்தல் மற்றும் சாத்தியமான சூழலை உருவாக்குதல், மாநில அளவில் கொள்கை உருவாக்கும் செயல்பாட்டில் ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்தி இணைப்புச் சாலை, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்குதல் போன்றவைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

பிற சமூகத்துறைகளுடன் ஒருங்கிணைப்பின் மூலம் நகர்புற ஏழைகள், நகர்புற குடிசை வாசிகளுக்கு நலத்திட்டங்கள் சென்றடைதல், நியாயவிலைக்கடை, காவல்நிலையம், நூலகம், ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவை உருவாக்குதல், நகர்புற ஏழைகள் மற்றும் சுகாதாரமற்ற குடியிருப்புகளில் வாழும் மக்களின் பொதுக்குறைபாடுகளான தெருக்களில் குப்பை தொட்டி அமைத்தல், கழிவுநீர் கால்வாய் பிரச்சனைகளை நிவர்த்தி செய்தல் ஆகியவை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.மேலும் இத்தகைய குடியிருப்புகளில் மகளிர்சுய உதவிக்குழுக்களை உருவாக்குதல், வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளித்தல், இ-சேவை மையம், ஆவின் நிலையம், செல்போன் டவர்கள் அமைத்தல் போன்றவைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, நிர்வாகப் பொறியாளர் த.இளம்பரிதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் ஷகிலாபீவி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 28 April 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு