/* */

பணியின் போது இறந்த காவலரின் குடும்பத்துக்கு பேஜ்மேட்ஸ் குடும்பல நிதி வழங்கல்

புதுக்கோட்டையில் பணியின் போது இறந்த காவலரின் குடும்பத்துக்கு, இறந்த காவலரின் பேஜ்மேட்ஸ் ரூ 17 லட்சத்து 25 ஆயிரத்து 210 குடும்ப நல நிதி வழங்கினர்.

HIGHLIGHTS

பணியின் போது இறந்த காவலரின் குடும்பத்துக்கு பேஜ்மேட்ஸ் குடும்பல நிதி வழங்கல்
X

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த மாதம் இரவு பணியாற்றிய வெள்ளலூர் காவல் நிலைய காவலர் ரமேஷ் விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

இது சம்பந்தமாக கடந்த 2002ஆம் ஆண்டு ரமேஷுடன் காவல் துறையில் சேர்ந்த பேட்ஜ்மேட்ஸ் சுமார் 3,500 காவலர்கள் ஒன்றிணைந்து, மறைந்த ரமேஷ் குடும்பத்திற்கு குடும்பநல நிதி வழங்கும் விழா ஏற்பாடு செய்திருந்தனர்.

புதுக்கோட்டை, புத்தாம்பூர் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடந்த விழாவில் ரமேஷின் மகன், மகள், மனைவி, தாயார் ஆகியோருக்கு குடும்ப நல நிதியாக 17 லட்சத்து 25 ஆயிரத்து 210 ரூபாய் வழங்கினர்.

அதைப் பெற்றுக் கொண்ட குடும்பத்தினர் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இந்த விழாவில் தமிழகம் முழுவதும் 2002ம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்த ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 28 April 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு