/* */

நார்த்தாமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம்: ஏப் 10 ல் உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்ட கோயில்களில் முக்கியமான இக்கோயிலில் நடைபெறும் தேரோட்டத்தையொட்டி ஏப் 10 ல் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது

HIGHLIGHTS

நார்த்தாமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம்: ஏப் 10 ல் உள்ளூர் விடுமுறை
X

பைல் படம்

புதுக்கோட்டை அருகே உள்ள நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சேர்ந்த கோயில்களில் இது முக்கியமான கோயிலாகும்.

இக்கோயிலின் பங்குனிப் பெருந்திருவிழா 2.4.2023 -ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காப்புக்கட்டுதலுடன் தொடங்கி 11.4.2023 -ம் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை 10 நாள்கள் நடைபெறுகிறது .விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் உபயதாரர்களின் மண்டகப்படியும், அன்னவாகனம், ரிஷபவாகனம், சிம்மவாகனம், குதிரை வாகனம் போன்ற வாகனங்களில் அம்மன் திருவீதி உலா காட்சியும் நடைபெறும். விழாவி்ன் முக்கிய நிகழ்வாகஏப்.10 -ஆம் தேதி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி, நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா 10.04.2023 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, அன்றைய தினம்(திங்கள்கிழமை) புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் (அரசு நிலை ஆணை எண்;: 313, பொது (பல்வகை) துறை நாள்: 11.03.1997-இல் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளுக்கிணங்க) உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக 29.04.2023 சனிக்கிழமை அன்று பணிநாளாகும். வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு 30.04.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பணிநாள் ஆகும்.

இந்த உள்ளுர் விடுறை 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழான விடுமுறை நாள் அல்ல என்பதால், இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினைக் கருதியும் அவசர அலுவல்கள் மேற்கொள்ளும் பொருட்டும் இயங்கும் . மேலும், அரசு பொதுத்தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் எவ்வித மாற்றமும் இன்றி நடைபெறும் எனவும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Updated On: 29 March 2023 11:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  3. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  4. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  6. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  9. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...