/* */

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை: தங்கம், ரொக்கம் ஆவணங்கள் பறிமுதல்

சோதனையில் 5 கிலோ தங்கம் 3.5 கிலோ வெள்ளி ரூ 23 லட்சத்தி 82 ஆயிரம் ரொக்கம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக

HIGHLIGHTS

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை: தங்கம், ரொக்கம் ஆவணங்கள் பறிமுதல்
X

லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையிட்ட புதுக்கோட்டை அருகே இலுப்பூரில் உள்ள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டின் முன் திரண்டிருந்த அவரது ஆதரவாளர்கள்

தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உட்பட நாற்பத்தி மூன்று இடங்களில் நடைபெற்ற சோதனையில் 5 கிலோ தங்கம் 3 கிலோ வெள்ளி ரூ 23 லட்சத்தி 82 ஆயிரம் ரொக்கம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு குவாரி மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்கள் உதவியாளர்கள் என 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் உறவினர்கள் உதவியாளர்கள் மற்றும் நண்பர்கள் என பலரது வீடுகளில் சோதனை நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உறவினர்கள் உதவியாளர்கள் நண்பர்கள் என மொத்தம் 43 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 5 கிலோ தங்கம் 3.5 கிலோ வெள்ளி ரூ 23 லட்சத்தி 82 ஆயிரம் ரொக்கம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Updated On: 18 Oct 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  3. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  4. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  5. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  6. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  7. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  9. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  10. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை