ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது

ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
X

கைது செய்யப்பட்டவர்கள்.

ஆவடி அருகே மர்ம கும்பல் நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி நகை, பணம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே முத்தா புதுப்பேட்டை எல்லையம்மன் நகர் பகுதியில் பிரகாஷ்( வயது 33) என்பவர் கிருஷ்ணா ஜூவல்லரி என்ற பெயரில் அவரது வீட்டின் கீழ் தளத்தில் நகைக்கடை மற்றும் அடகுக்கடையை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 15.ஆம் தேதி நான்கு வடமாநில வாலிபர்கள் பிரகாஷின் காரில் நகை வாங்குவது போல் நடித்து வந்து திடீரென கடைக்குள் புகுந்து பிரகாஷை துப்பாக்கி முனையில் மிரட்டி பிறகு அவரை கடைக்குள் வைத்து கட்டிப்போட்டு ரூபாய் 1.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வெள்ளி, வைர நகைகளையும், ரூபாய் 5 லட்சம் ரொக்க பணத்தையும் திருடி கடையை சாத்தி விட்டு சென்றனர்.

அப்போது அவ்வழியாக வந்த பிரகாசம் உறவினர் ஒருவர் கடை சாத்தி இருந்தது கண்டு சந்தேகத்தின் பெயரில் கதவை திறந்தபோது பிரகாஷ் கை கால் கட்டி போட்டதே கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இது குறித்து முத்தா புதுப்பேட்டை காவல்துறை தகவல் அளித்தனர்.

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு வழக்கு பதிவு செய்த தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ராஜஸ்தானை சேர்ந்த தினேஷ் குமார் ( வயது 26), சேட்டன் ராம் ( வயது 25) ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேருக்கும் இடம் கொடுத்து தனது அடைக்கலத்தில் வைத்திருந்ததால் போலீசார் இருவரையும் ராஜஸ்தானில் வைத்து கைது செய்து தமிழகத்திற்கு அழைத்து வந்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட நான்கு வட மாநில இளைஞர்களை போலீசார் வலைவீச்சு தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil