/* */

புதுக்கோட்டையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த இந்து அமைப்பினர் கைது

மாணவி லாவண்யா சாவுக்கு நீதி கேட்டு புதுக்கோட்டையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த இந்து அமைப்பினர் கைது
X

புதுக்கோட்டையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வி.ஹெச்.பி. மற்றும் இந்து அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்த லாவண்யா என்ற மாணவி நேற்று முன்தினம் இறந்தார். அந்த பள்ளியில் கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டதாகவும் அதன் காரணமாகவே அந்த பள்ளி மாணவி இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் லாவண்யாவின் இறப்பிற்கு நீதி கேட்டும் அந்த தனியார் பள்ளி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மதமாற்றத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் ,அவரது இறப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும், கட்டாய மத மாற்றத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே வி.ஹெச்.பி. இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. தடையை மீறி இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக லாவண்யாவின் இறப்புக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி 50க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

Updated On: 21 Jan 2022 3:06 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  2. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  3. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ+ அங்கீகாரம் வழங்கியது நாக் அமைப்பு
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  5. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  6. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  7. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  8. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  10. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !