/* */

புதுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் இயக்கம்

இரயில் பயணிகள் சங்கம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் மற்றும் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேறியது

HIGHLIGHTS

புதுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து  அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் இயக்கம்
X

புதுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் இயக்கம்

இரயில் பயணிகள் சங்கம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் மற்றும் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக, போக்குவரத்து துறை அமைச்சரின் பரிந்துரைப்படி, மாநிலங்களவை உறுப்பினர் வேண்டு கோளுக்கிணங்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) புதுக்கோட்டை மண்டலம் சார்பாக புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து 116G, 284, 211 புதிய வழித்தடத்தினை மாநிலங்களவை திமுக உறுப்பினர் எம்.எம். அப்துல்லா நேற்று மாலை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்வில், போக்குவரத்துக்கழக துணை மேலாளர் சுப்பு, மேலாளர்கள் தில்லைராஜ், பழனிவேல், பொதுச்செயலாளர் என்.வேலுச்சாமி, செயலாளர் பி.பொன்னுச்சாமி, நகர கழக செயலாளர் க.நைனா முகமது, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் மாருதி கண.மோகன்ராஜா, ஏ.ரமேஷ், ஜெ.துரைக்கார்த்திகேயன், வி.ரவிச்சந்திரன், பி.முத்துக்குமார், கே.நாகூர்கனி, ஆர்.பாஸ்கர், சாத்தையா, செல்வகுமார், செந்தில்குமார், விஜயகுமார், கணேசன் இரயில்வே அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து அட்டவணை: புதுக்கோட்டை, பிருந்தாவனம், பழனியப்பா நிறுத்தம், புதிய பேருந்து நிலையம், மகளிர் கலைக் கல்லூரி வழியாக ரயில் நிலையத்திற்கு காலை 4.50 மணிக்கும் - ரயில்நிலையத்திருந்து , மகளிர் கலைக் கல்லூரி வழியாக புதுக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு பேருந்து காலை 5.45 மணிக்கு புறப்படும். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து மகளிர் கலைக் கல்லூரி வழியாக ரயில் நிலையத்திற்கு பேருந்து புறப்படும் நேரம் இரவு 11.05 மணிக்கும். ரயில்நிலையத்தில் இருந்து மகளிர் கலைக் கல்லூரி வழியாக புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து மகளிர் கலைக் கல்லூரி வழியாக ரயில் நிலையத்திற்கு பேருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும். ரயில் நிலையத்திலிருந்து - மகளிர் கலைக் கல்லூரி வழியாக புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து இரவு 12.00 மணிக்கு புறப்படும் என்ற கால அட்டவணையை வெளியிடப்பட்டுள்ளது

Updated On: 25 Oct 2021 11:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்