/* */

விவசாயிகள் பிஎம்கிஸான் திட்டத்தில் தொடர்ந்து தவணைத் தொகைகளை பெற பதிவு அவசியம்

மத்திய அரசானது ஒரு விவசாய குடும்பத்திற்கு ரூ.2000- வீதம் ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ரூ.6000- வழங்கி வருகிறது.

HIGHLIGHTS

விவசாயிகள் பிஎம்கிஸான் திட்டத்தில் தொடர்ந்து தவணைத் தொகைகளை பெற பதிவு அவசியம்
X

விவசாயிகள் பிஎம்கிஸான் திட்டத்தில் தொடர்ந்து தவணைத் தொகைகளை பெறுவதற்கு உடனடியாக இகேஒய்சி செய்து கொள்ள வேளாண்மை இணை இயக்குநர் அழைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிஎம்கிஸான் திட்டத்தில் தொடர்ந்து தவணைகள் பெறுவதற்கு இ-கேஒய்சி அவசியம் .பிஎம்கிஸான் திட்டத்தில் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான வேளாண் இடுபொருட்களை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசானது ஒரு விவசாய குடும்பத்திற்கு ரூ.2000- வீதம் ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ரூ.6000- வழங்கி வருகிறது.

இதுவரை இந்த திட்டத்தில் பதிவு செய்த தகுதியான விவசாயிகளுக்கு 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்இ 13–வது தவணை பெறுவதற்கு தங்களது ஆதார் விவரங்களைக் கொண்டு இ-கேஒய்சி செய்துகொள்வது அவசியமாகிறது. மேலும் தங்களது வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ள வேண்டும். ஏற்கனவே ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள்இ தங்களது ஆதார் எண் விவரங்களை அருகே உள்ள பொது சேவை மையம் அல்லது தபால் அலுவலகத்தின் தபால் சேவை மூலம் பிஎம்கிஸான் திட்ட வலைதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்.

மேலும் இனிவரும் தவணை தொகைகள் அனைத்தும் ஆதார் எண் அடிப்படையில் வழங்கப்படும் என்பதனால்இ பயனாளிகள் அனைவரும் தங்களது வங்கி கணக்கு உள்ள வங்கி கிளையை அணுகி வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எனவேஇ புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பி.எம் கிசான் திட்டத்தில் தவணைத் தொகைகளை தொடர்ந்து பெறுவதற்கு உடனடியாக இ-கேஒய்சி செய்து பயன்பெறுமாறு புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் மா. பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார்.

Updated On: 3 Dec 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  2. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  3. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  4. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  6. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  7. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  8. ஈரோடு
    ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராவுடன் இணைத்திருந்த...
  9. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  10. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...