அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
X

மனு அளித்த பொதுமக்கள்.

திருவள்ளூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆர்கே பேட்டை தாலுகாவிற்கு உட்பட்ட கலைஞர் நகர், எஸ் விஜி புரம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மனுவில் குறிப்பிட்டதாவது கடந்த 2000 ஆவது ஆண்டு எஸ் வி ஜி புரம் ஊராட்சிக்குட்பட்ட சர்வே என். 113/-2 மற்றும் 112/3 -A சமத்துவ அடிப்படை மூலம் ஆதிதிராவிடர் நலத்துறை இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

இருப்பினும் இதுவரை தங்களுக்கு மின்சாரம், குடிநீர், சாலை வசதி போன்ற எந்த அடிப்படையில் வசதிகளும் செய்து தரவில்லை என்றும், தற்பொழுது ஆர்கே பேட்டை வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் அதே இடத்தில் எச்சரிக்கை பலகை வைத்து இந்த இடம் ஆதிதிராவிடர் நத்தம் வகைப்பாடு கொண்ட நிலமாகும்.

இந்த இடம் அரசுக்கு சொந்தமானது ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெயர் பலகை வைத்துள்ளதாகவும், இதனால் இலவச வீட்டு மனை பெற்று வீடு கட்டிய பயனாளிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா