/* */

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத திமுக அரசு:முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் செய்த சாதனைகளை எடுத்துக்கூறி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றார் விஜயபாஸ்கர்

HIGHLIGHTS

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத திமுக அரசு:முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
X

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக்குழு தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அரசாக திமுக அரசு உள்ளது என்றார் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் .

புதுக்கோட்டை மாவட்ட ஊாராட்சிக்குழுவின் 9- ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல், வரும் 9 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் திமுக அதிமுக கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக வேட்பாளரை ஆதரித்து தற்போதைய அமைச்சர்களும், அதிமுகவை ஆதரித்து முன்னாள் அமைச்சரும் களத்தில் இறங்கி தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அழகு சுந்தரியை ஆதரித்து, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கிராமங்கள்தோறும் வீடு வீடாகச் சென்று இரட்டை இலை சின்னதிற்கு வாக்குகள் சேகரித்தார்.நார்த்தாமலை துடையூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக வாக்குகளை சேகரித்து பேசியதாவது: துடையூரில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையை கடந்த 10 தினங்களுக்கு முன்பு தண்ணீர் தேங்கி இருந்த போது, அதை கடக்க முயன்ற அரசு மருத்துவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சோகசம்பவத்தை கேள்விப்பட்ட உடன், அவரது இல்லத்திற்கு சென்று ஆறுதல் தெரிவித்து, சுரங்கப் பாதையை உடனடியாக மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினேன். அதன் அடிப்படையில் தற்போது தற்காலிகமாக இந்த பாலம் மூடப்பட்டுள்ளது.

இதை நிரந்தரமாக மூடுவதற்கு அதிமுக மக்களோடு மக்களாக துணை நிற்கும். இதற்காக மத்திய ரயில்வே துறை மற்றும் தமிழக அரசிற்கு கடிதம் அனுப்பப்படும். மக்கள் உணர்வுகளோடு கலந்து இருப்பவர்கள் அதிமுகவினர்தான். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் செய்த சாதனைகளை எடுத்துக்கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறோம்.கடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற முடியாத சூழ்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தது . தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அரசாக திமுக உள்ளது.நகை கடன் தள்ளுபடி கூட செய்ய முடியாத சூழ்நிலையில் திமுக உள்ளது.பொதுமக்கள் அதிமுகவை ஆதரிக்க தயாராகிவிட்டனர் என்றார் விஜயபாஸ்கர்.

Updated On: 2 Oct 2021 5:40 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்