/* */

மாவட்ட அளவிலான கற்போம் எழுதுவோம்: விழிப்புணர்வு பணிமனை பயிற்சி நிறைவு

புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கற்போம் எழுதுவோம் விழிப்புணர்வு கலைப்பயணம் 10 நாட்கள் நடைபெறவுள்ளது

HIGHLIGHTS

மாவட்ட அளவிலான கற்போம் எழுதுவோம்: விழிப்புணர்வு  பணிமனை பயிற்சி நிறைவு
X

புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த மாவட்ட திட்ட அலுவலக வளாகத்தில் கடந்த  நடைபெற்று வந்த  கற்போம் எழுதுவோம் விழிப்புணர்வு பயிற்சி   நிறைவு விழாவில் மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர் சாமி  சத்தியமூர்த்தி கலந்து கொண்டு  பயிற்சி பெற்றவர்களுக்கு வாழ்த்து  தெரிவித்தார்.

மாவட்ட அளவிலான கற்போம் எழுதுவோம் விழிப்புணர்வு கலைப்பயண பணிமனை பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கற்போம் எழுதுவோம் விழிப்புணர்வு கலைப்பயணம் 10 நாட்கள் நடைபெறவுள்ளது. அதற்கான மாவட்ட அளவிலான கற்போம் எழுதுவோம் விழிப்புணர்வு கலைப்பயண பணிமனை பயிற்சி புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலக மாடியில் செப்டம்பர் 18 முதல் செப்டம்பர் 20 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.

பயிற்சியின் முதல்நாளில் ஊர்கூடுதே பாடல் ,குறுஞ்செய்தி நாடகம் பயிற்சி அளிக்கப்பட்டது.இரண்டாம்நாளில் தந்தனா தாளம் போடுங்க பாடல், மஞ்சள், குங்குமம் கொண்டாட பாடல், சிலேட் நாடகம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

பயிற்சியின்நிறைவு நாளான மூன்றாம் நாள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்திய மூர்த்தி கற்போம் எழுதுவோம் விழிப்புணர்வு கலைப்பயணம் ஒத்திகை நிகழ்ச்சியை பார்வையிட்டார்.பின்னர், அவர்களிடம் நன்கு பயிற்சி பெற்று மாவட்டத்தில் சிறப்பான முறையில் பொதுமக்களிடத்தில் கற்போம் எழுதுவோம் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இதில்,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் இரவிச்சந்திரன்,,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சியில்,புதுக்கோட்டை மாவட்ட விடியல் கலைக்குழுவினர் 5 பேர்,சிவகங்கை மாவட்டம் அறிவொளி கலைக்குழுவினர் 5 பேர் என மொத்தம் 10 பேர் கலந்து கொண்டனர். பயிற்சியின்கருத்தாளர்களாக மாணிக்கம்,கண்ணன்,சுதாகர்,ரெக்ஸ் ஆகியோர் செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Updated On: 20 Sep 2021 1:02 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  9. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!