/* */

புதுக்கோட்டை நகரில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நெகிழி பைகள் பறிமுதல்

புதுக்கோட்டை நகரில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நெகிழி பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

புதுக்கோட்டை நகரில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நெகிழி பைகள் பறிமுதல்
X

 புதுக்கோட்டை நகர பகுதிகளில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள நெகிழி பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் நெகிழிப் பைகளை தடை செய்வதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மஞ்சப்பை இயக்கம் என ஒரு திட்டத்தை துவக்கி வைத்து அனைவரும் மஞ்சப்பை மற்றும் துணிப்பையை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அதேபோல் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தமிழ்நாடு முழுவதும் நெகிழிப்பை ஒழிப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை நகராட்சி அதிகாரிகள் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள உணவகம் மருந்து கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் அதிரடி ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில், தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை மறைத்து வைத்திருந்த கடைகளில் இருந்து ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு டன் நெகிழிப் பைகளை பறிமுதல் செய்து, நெகிழிப் பைகளை கடைகளில் வைத்திருந்த கடைகளுக்கு மொத்தமாக, 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Updated On: 4 Jan 2022 12:41 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்