/* */

திருவப்பூர் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.9.13 லட்சம் பக்தர்களின் காணிக்கை

திருவப்பூர் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.9.13 லட்சம் பக்தர்களின் காணிக்கை
X

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்

புதுக்கோட்டை நகரின் நாற்பறமும் சக்தி விளங்கும் சக்தி பீடங்களாகத் திகழும் அம்பிகைகளின் திருக்கோயில்கள் அமைந்த பெருமை புதுக்கோட்டை நகருக்கே உரிய பெருஞ்சிறப்பு. அவற்றில் புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சார்ந்த திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் எழுந்தருளியுள்ள இத்திருத்தலம் எல்லா வகையிலும் ஏற்றம் பெற்றதாகும்.

வரலாற்றில் அறுதியிட்டு கூற முடியாததும், நீண்ட நெடுங்காலமாக பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி பக்தர்கள் இதய பீடத்தில் நீங்காது இடம் பெற்று கைமாறு கருதாது கார்மேகம் போல் மாரியாய் அருள் மழை பொழியும் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் பிற கோயில்களுக்கு சிகரம் வைத்தாற் போல திகழும் இக்கோயிலில் அருள் பொழி்யும் எழில் கோலத்தில் அம்மன் வீற்றிருக்கிறாள்.

இத்தகைய பிரசித்தி பெற்ற பிரசித்தி பெற்ற திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் நான்கு மாதங்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை கோயிலில் உள்ள நான்கு உண்டியல்கள் காணிக்கை என்னும் பணி நடைபெற்றது. கோயில் வளாகத்தில் புதுக்கோட்டை அறநிலையத்துறை உதவி ஆணையர் தி.அனிதா முன்னிலையில் புதுக்கோட்டை ஆய்வாளர் திவ்யபாரதி, செயல் அலுவலர் முத்துராமன், ஆலயம் மேற்பார்வையாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் அரசு மன்னர் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர் கள் என 50- க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

நான்கு உண்டியல்களிலும் உள்ள காணிக்கைகளை எண்ணியதில் ஒன்பது லட்சத்தி 13 ஆயிரத்து 39 ரூபாய் ரொக்க பணமும், 134 கிராம் தங்கம், 480 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு டாலர் (பணம்) ஆகியவற்றை உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ரொக்கப்பணம் மற்றும் வெளிநாட்டு டாலர்களை வங்கியிலும் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். வருகின்ற 26 -ஆம் தேதி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் 15 நாள்கள்கள் நடைபெறும் மாசிப் பெருந் திருவிழா பூச்சொரிதல் விழாவுடன் தொடங்குகிறது.. அந்ததிருவிழாவின் போது பக்தர்களின் காணிக்கைகளால் உண்டியலில் ஏற்படும் இட நெருக்கடியை தவிர்க்கும் வகையில் முன்னதாகவே உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Updated On: 21 Feb 2023 11:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  3. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  4. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  5. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  10. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?