/* */

புதுகை நகராட்சி: 25 வது வார்டு திமுக வேட்பாளர் குங்குமம் கொடுத்து பிரசாரம்

திமுக வேட்பாளர் திலகவதி கம்பன் நகர் பகுதியில் வீடு வீடாக சென்று பெண்களுக்கு சந்தனம் குங்குமம் பூ கொடுத்து வாக்கு சேகரித்தார்

HIGHLIGHTS

புதுகை நகராட்சி: 25 வது வார்டு திமுக வேட்பாளர்   குங்குமம் கொடுத்து பிரசாரம்
X

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 25 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் திலகவதி பெண்களுக்கு சந்தனம் குங்குமம் பூ கொடுத்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 25 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் திலகவதி கம்பன் நகர் பகுதியில் வீடு வீடாக சென்று பெண்களுக்கு சந்தனம் குங்குமம் பூ கொடுத்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

புதுக்கோட்டை நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரத்தில் வித விதமான டெக்னிக்குகளை பயன் படுத்தி வேட்பாளர்களை கவர்ந்து வருகின்றனர்.புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளுக்கு பிப்ரவரி 19-ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. 42 வார்டுகளில் போட்டியிட திமுக அதிமுக காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என 332 பேர் களத்தில் உள்ளனர்.வேட்பு மனுக்களை வாபஸ் பெற 7 -ஆம் தேதி கடைசி நாளாக அன்றைய தினம் தான் எவ்வளவு வேட்பாளர்கள் இறுதியாக களத்தில் உள்ளனர் என்பது தெரியவரும்.



இந்நிலையில் தற்போது புதுக்கோட்டை நகராட்சித் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.திமுக அதிமுக வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் புதுவகையான டெக்னிக்கை பயன்படுத்தி வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர்.25 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் திலகவதி வீடு வீடாக தனது கணவர் மாவட்ட பொருளாளர் ஆ.செந்தில், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் உள்ளிட்ட ஆதரவாளர்களோடு சென்று ஆண்களுக்கு சால்வை அணிவித்து வாக்கு சேகரிக்கிறார். பெண்களுக்கு சந்தனம் குங்குமம் ரோஜா பூ கொடுத்து தனக்கு வாக்களிக்குமாறு வாக்குகளை சேகரித்து வருகிறார்.

இந்த வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளின் மகன் ஒவ்வொரு வீட்டிலும் திமுகவிற்கு வாக்கு அளிக்குமாறு கேட்டு ஸ்டிக்கர் ஒட்டி கொண்டே சென்றார். அப்போது அந்த பகுதியில் அதிமுக வேட்பாளர் அப்துல் ரஹ்மான் தனது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரித்து வந்த போது திமுக ஸ்டிக்கர்க்கு அருகிலேயே அதிமுக சார்பில் அதிமுக வாக்களிக்குமாறு கேட்டுக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட து.

Updated On: 6 Feb 2022 4:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!